மகேஸ்வரர் கோயில், கூர்கஞ்சேரி

மகேஸ்வரா கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரில் கூர்கஞ்சேரியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள மூலவர் 1092 ஆம் ஆண்டு மலையாள மாதமான சிங்கத்தில் நாராயண குருவால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

மகேஸ்வரர் கோயில்

துணைச்சன்னதிகள்

தொகு

இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். இங்குபார்வதி, கணபதி, முருகன் ஐயப்பன், நவக்கிரகங்கள், நாகர்கள் ஆகியோருக்கான துணைச்சன்னதிகள் உள்ளன.

தைப்பூசம்

தொகு

சிவபெருமான் முக்கிய தெய்வமாக இருந்தாலும், சுப்ரமணியருக்கு உரித்தான ஏழு நாள் திருவிழாவான தைப்பூசம் முக்கிய திருவிழாவாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Koorkencherry Sree Maheswara Temple". Enchanting Kerala. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08.
  2. "Temples By Guru". Sree Narayana Gurudevan. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08.
  3. "Temples". Sree Narayana Mandira Samiti. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08.