மக்பூப் மாளிகை
மக்பூப் மாளிகை, மக்பூப் மேன்ஷன் (Mahbub Mansion) என்றும் அறியப்படும் இது ஓர் அரண்மனையாகும். இது ஐதராபாத்தின் மாலிக்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது.[1] இது ஐதராபாத்தின் ஆறாவது நிசாம் மிர் மகபூப் அலி கான் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் எப்போதாவது இங்கு வந்து தங்கிச் சென்றார். ஆனால் அவரது நிரந்தர வசிப்பிடம் புராணி அவேலி என்ற அரண்மனையாகும் .
மக்பூப் மாளிகை | |
---|---|
சொற்பிறப்பியல் | மிர் மக்பூப் அலி கான் |
பொதுவான தகவல்கள் | |
வகை | அரண்மனை |
முகவரி | மாலிக்பேட்டை, ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
திறக்கப்பட்டது | 1902 |
உரிமையாளர் | ஐதராபாத் நிசாம் |
வரலாறு
தொகுஇது, பாரம்பரிய ஐரோப்பிய மற்றும் முகலாயக் கட்டிடக்கலை பாணியில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை ஆகும். இது இராஜாவின் அரண்மனையின் கிழக்குத் தொகுதிகளைப் போன்றது. இது 19 ஆம் நூற்றாண்டில் ஐதராபாத்து நிசாமால் கையகப்படுத்தப்பட்டது.
தகவல்கள்
தொகுஆறாம் ஆசாப் ஜாவின் மனைவியான சர்தார் பேகம், பந்தயங்களைப் பார்ப்பதில் விருப்பமுள்ளவராக இருந்ததால், மாளிகையில் இருந்து தங்க வேலைப்பாடுகளாலான திரைச்சீலைகளுக்கு மத்தியில் பந்ததயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். பர்தா இருப்பதால் தங்கத் திரைகளில் இருந்து சூரிய ஒளி பிரதிபலித்ததால், ராணியை யாரும் பார்க்க முடியாது. [2]
இன்றைய நாள்
தொகு1983 ஆம் ஆண்டில், உஸ்மான் கஞ்சின் மசாலா சந்தை அதிகாரப்பூர்வமாக மக்பூப் மாளிகையில் உள்ள திறந்த நிலத்திற்கு மாற்றப்பட்டது.[3] மிகவும் மோசமான நிலையில் இருந்த அரண்மனை கைவிடப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதேசமயம், அரண்மனை நிலம் முழுவதுமாக வீட்டுவசதி மற்றும் வணிக வளாகங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.[1][4][5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rohit P S. "A mansion goen to the dogs". Times of India. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/A-mansion-gone-to-the-dogs/articleshow/12191530.cms.
- ↑ "Pit Stop Of The Royals Nizams – 'Mahboob Mansion' Of Malakpet In Hyderabad | #KhabarLive Hyderabad | Hyderabad, KhabarLive, Breaking News, Business, Analysis" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-21.
- ↑ "Fire in cracker shop triggers panic". தி இந்து. 2010-10-05 இம் மூலத்தில் இருந்து 13 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101013020734/http://www.hindu.com/2010/10/05/stories/2010100561500300.htm.
- ↑ "The 116-year-old Mahbub Mansion in a state of neglect". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/hyderabad/2018/jun/21/the-116-year-old-mahbub-mansion-in-a-state-of-neglect-1831300.html.
- ↑ "A time when it was the icon of luxury". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/hyderabad/2018/jun/21/a-time-when-it-was-the-icon-of-luxury-1831302.html.