மங்காவிளை
மங்காவிளை (Mangavilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய சிற்றூராகும்.[1] தர்மபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மங்காவிளை நாகர்கோவிலிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மங்காவிளை என்பதற்கு அழியாத புகழ் என்பது பொருளாகும். இங்கு சுமார் 850 மக்கள் வசிக்கின்றனர். வடக்கே பிலாவிளை, கிழக்கே நெடுவிளை, தெற்கே களியக்காவிளை, மேற்கில் புத்தூர் மற்றும் பனவிளை உட்பட பல சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. இக்கிராமம் தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.
மங்காவிளை Mangavilai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°14′N 77°21′E / 8.23°N 77.35°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி மாவட்டம் |
அரசு | |
• கிராமத் தலைவர் | கு. ஜெகன். |
• வடிவமைப்பு | வெங்கடேசுவரன். டி |
• ஆதரவு | வைகுந்த ராசா. பி |
• உதவி | பாலமுருகன். கே |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,200 |
Languages | |
• Official | Tamil |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 629501 |
Telephone code | 91-4652 |
வாகனப் பதிவு | TN-74 |
மக்களவை (இந்தியா) தொகுதி | கன்னியாகுமரி |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | கன்னியாகுமரி |
மங்காவிளை கிராமம் அரசியல் துறையில் வெற்றி கண்டுள்ளது. இக்கிராம உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மட்டத்தில் பணியாற்றுகின்றனர். கிராம உறுப்பினர் எம்.சி. பாலன் இராச்சியசபாவில் பணியாற்றினார்.
அரபிக்கடலில் இருந்து 1 கிமீ தொலைவில் மங்காவிளை அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையகமான நாகர்கோவிலில் இருந்து 9 கி.மீ தொலைவிலும், இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் உள்ளது.
கோயில்கள்
தொகுமங்காவிளை கிராமத்தின் மையத்தில் சிறீ சிவ சுடலை மாடன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வடக்கே அருணாச்சலேசுவரர் கோயிலும்,[2] மேற்கில் வைகுந்தர், இசக்கியம்மன் கோயில்களும் அமைந்துள்ளன.
காலநிலை
தொகுகோடையில் நிலவும் பெரும வெப்பநிலை 30 செ. ஆகும். மங்காவிளையில் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய இருபருவ மழையும் பொழிகிறது.
சமூகநல மன்றங்கள்
தொகு- நேதாஜி இளைஞர் மன்றம், மங்காவிளை
- காந்திஜி இளைஞர் மன்றம், மங்காவிலை
மேற்கோள்கள்
தொகு- ↑ "மங்காவிளை பள்ளியில் ஆண்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2013/mar/15/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-646340.html. பார்த்த நாள்: 23 May 2023.
- ↑ மலர், மாலை (2021-11-08). "மங்காவிளை அருணாச்சலசாமி கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடக்கிறது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.