மங்கோலிய-மஞ்சூரிய புல்வெளி
மங்கோலியன்-மஞ்சுரியன் புல்வெளி சூழ்நிலைமண்டலமானது, மங்கோலியன்-மஞ்சுரியன் ஸ்டெப்பி புல்வெளி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மித வெப்பமண்டலப் புல்வெளி உயிர்க்கோளம் மங்கோலியா, சீன தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள உள் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனா ஆகியவற்றின் பகுதிகளில் காணப்படுகிறது.
அமைப்பு
தொகுமங்கோலியன்-மஞ்சூரியன் புல்வெளியனது, 887300 சதுர கிலோமீட்டர் ( சதுர மைல்கள்) அளவிற்குப் பரவியுள்ளது. மிதவெப்பமண்டலப் புல்வெளிகள், சவன்னாக்கள் மற்றும் புதர்நிலங்கள் அடங்கிய உயிர்க்கோளமானது கோபி பாலைவனத்தைச் சுற்றி ஒரு பெரிய பிறை போன்ற அமைப்பை உருவாக்குகின்றன. மத்திய மற்றும் கிழக்கு மங்கோலியா முழுவதும் உள் மங்கோலியாவின் கிழக்குப் பகுதி, மத்திய மஞ்சூரியாவின் கிழக்குப் பகுதி வரை பரவியுள்ளது. பின்னர் வட சீனச் சமவெளியின் தென்மேற்கு திசையில் குறுக்காக, வடகிழக்கு மற்றும் வடக்கே, செலெஞ்ச் -ஓர்கான் மற்றும் டெளரியன் வனப்பகுதி புல்வெளியனாது சைபீரியாவின் காடுகளுக்கு இடையில் ஒரு இடைநிலை மண்டலத்தை உருவாக்குகின்றன. கிழக்கு மற்றும் தென்கிழக்கில், மஞ்சூரிய கலப்பினக் காடுகள், வடகிழக்கு சீனச் சமவெளி இலையுதிர் காடுகள், மற்றும் மத்திய சீன பீடபூமி கலப்பு காடுகள் உள்ளிட்ட மிதவெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள் மற்றும் கலப்பு காடுகளாக புல்வெளிகள் மாறுகின்றன. தென்மேற்கில், புல்வெளிகள் மஞ்சள் நதி வரை நீண்டுள்ளன, அதன் குறுக்கே ஆர்டோஸ் பீடபூமி புல்வெளி உள்ளது . இது மேற்கில் உள்ள அல்டாய் மலைகள் மற்றும் கிழக்கில் கிரேட்டர் கிங்கன் பகுதிக்கு இடையில் உள்ளது.
காலநிலை
தொகுவெப்பமான கோடை மற்றும் குளிர்காலத்துடன் காலநிலை மிதமானதாக இருக்கும். ஒப்பீட்டளவில் வறண்ட நிலையில் இருப்பதால், குறைவான மழை மற்றும் நிலப்பரப்பால் சூழப்பட்ட தன்மை ஆகியவற்றின்காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகள் மட்டுமே இங்கு வாழ முடியும்.
தாவரங்கள்
தொகுஇந்த நிலப்பகுதியில் நடுத்தர உயரம் முதல் மிக அதிக உயரம் வரையிலான புல் வகைகளைக் (இறகு புல், ஸ்டிபா பைகலென்சிஸ், செம்மறி ஆடுகளுக்கான புல் அனூரோலெபிடியம் சினென்ஸ்) கொண்டுள்ளது. கோபி பாலைவனத்தைச் சூழ்ந்த பகுதிகளில் வறட்சியைத் தாங்கக் கூடிய புல் வகைகள் காணப்படுகின்றன.
இந்தப் புல்வெளியின் தென்மேற்கு சரிவுகளில் கிரேட்டர் கிங்கான் தொடரானது அகனற இலைக்காடுகளை (மங்கோலிய ஓக், வில்லோ, சைபீரிய சில்வர் பிர்ச் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
தொகுகுளிர்காலத்தில் புல்வெளியானது வறண்டு, மிகவும் எரியக்கூடியதாக மாறி, காட்டுத்தீ மிகவும் பொதுவானதாகிறது. புல் நெருப்பிலிருந்து விரைவாக மீண்டு விடுகிறது - இருப்பினும், மரங்கள் அவ்வாறு மீள்வதில்லை. இப்பகுதியில் மரங்கள் இல்லாததற்கான காரணத்தை இது ஓரளவு விளக்குகிறது. புல்வெளிகளில் பருவகால வறட்சிகளும் உள்ளன, பொதுவாக கோடையில் இது நிகழ்கிறது.
கலாச்சாரம்
தொகுபுல்வெளியில் பெரும்பான்மையான மக்கள் மங்கோலியர்கள் என்று அழைக்கப்படும் நாடோடிகள் ஆவர். மங்கோலியன் புல்வெளியில் உள்ள குடும்பங்கள் ஒரு பெரிய அதே நேரத்தில் அடக்கமான கூடாரமான "ஜெர்ஸ்" வகைக் கூடாரங்களில் வாழ்கின்றன. மங்கோலியர்கள் குதிரை சவாரி செய்வதில் வல்லவர்களாகவும் உள்ளனர். எனவே, பல குடும்பங்கள் புல்வெளியில் சுற்றித் திரியும் பல குதிரைகளை வைத்திருக்கின்றனர். புல்வெளியில் உள்ளவர்கள் அங்குள்ள விலங்குகளை தங்கள் உணவு மற்றும் பானங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். பலவிதமான பாரம்பரிய மங்கோலிய பாடல்களுடன் அவர்கள் மிக முக்கியமான இசை கலாச்சாரத்தையும் கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள்
தொகுமங்கோலியன்-மஞ்சூரியன் புல்வெளி மனிதர்களின் வாழ்விட விரிவாக்கத்தின் காரணமான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இருப்பினும் அதன் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதி, மேற்கு ஆசியா அல்லது வட அமெரிக்காவில் காணப்பட்ட இதே போன்ற புல்வெளிகளைப் போல விவசாயத்தால் மாற்றப்படவில்லை.[1][2]