மஞ்சள் நிறமி 10
மோனோ அசோபிரசோலோன் வகைச் சாய கரிமச் சேர்மம்.
மஞ்சள் நிறமி 10 (Pigment Yellow 10) என்பது C16H12Cl2N4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மோனோ அசோபிரசோலோன் சாயச் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக இச்சாயம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் சாலைகளில் மஞ்சள் வண்ணம் பூசுவதற்கு இந்நிறம் பயன்படுகிறது. டைகுளோரோ அனிலினுடன் பிரசோலோன் சேர்த்து வருவிக்கப்படும் ஈரசோனியம் உப்பை பிணைப்பு வினைக்கு உட்படுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது[1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பென்சிடின் மஞ்சள்10, சேன்யோ மஞ்சள் சாயம் 8105
| |
இனங்காட்டிகள் | |
6407-75-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21118695 |
| |
பண்புகள் | |
C16H12Cl2N4O | |
வாய்ப்பாட்டு எடை | 347.20 |
தோற்றம் | மஞ்சள் திண்ம்ம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எக்சு கதிர் படிகவியல் ஆய்வு இச்சாயத்தின் வேதிக் கட்டமைப்பை உறுதிப்படுத்துகிறது. C=O பிணைப்பு மற்றும் இரண்டு ஐதரசோன் குழுக்கள் ஒரு சமதள மூலக்கூற்றில் இக்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pigments, Organic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.a20_371.
- ↑ A. Whitaker (1988). "CI Pigment Yellow 10, 4-[2',5'-(dichlorophenyl)hydrazono]-5-methyl-2-phenyl-3H-pyrazol-3-one". Acta Crystallographica C C44: 1767-70. doi:10.1107/S0108270188006791.