மஞ்சள் நிறமி 139

ஓர் ஐசோ இண்டோலின் வழிப்பெறுதி

மஞ்சள் நிறமி 139 (Pigment Yellow 139) என்பது C16H9N5O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் ஆரஞ்சு சாயமாகப் பயன்படுத்தப்படும் இந்நிறமி ஐசோ இண்டோலின் வழிப்பெறுதி சாயமாக வகைப்படுத்தப்படுகிறது. இம்மஞ்சள் ஆரஞ்சு நிற நிறமி பெரும்பாலான கரைப்பான்களிலும் கிட்டத்தட்ட கரைவதில்லை[1].

மஞ்சள் நிறமி 139
பெயர்கள்
வேறு பெயர்கள்
லித்தால், விரைவு மஞ்சள் 1840
இனங்காட்டிகள்
36888-99-0
ChemSpider 4590022
EC number 253-256-2
InChI
  • InChI=1S/C16H9N5O6/c22-11-7(12(23)19-15(26)18-11)9-5-3-1-2-4-6(5)10(17-9)8-13(24)20-16(27)21-14(8)25/h1-4,17H,(H2,18,19,22,23,26)(H2,20,21,24,25,27)
    Key: JSBMGPVJAADXIZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5488898
  • O=C1NC(=O)NC(=O)C1=C2c3ccccc3C(N2)=C4C(=O)NC(=O)NC4=O
பண்புகள்
C16H9N5O6
தோற்றம் ஆரஞ்சு நிறத் திண்மம்
அடர்த்தி 1.742 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆர்த்தோ தாலோநைட்ரைலுடன் அமோனியாவைச் சேர்த்து வினைப்படுத்தினால் டையிமினோ ஐசோயிண்டோலின் உருவாகிறது. பின்னர் இந்த இடைநிலைச் சேர்மம் பார்பிட்டியூரிக் அமிலத்துடன் சேர்ந்து ஒடுக்கமடைகிறது[2].

மேற்கோள்கள் தொகு

  1. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
  2. Volker Radtke, Peter Erk andBenno Sens "Isoindoline Pigments" in Edwin B. Faulkner, Russell J. Schwartz in High Performance Pigments. Edited by Edwin B. Faulkner and Russell J. Schwartz, Wiley-VCH, Weinheim. 2009. எஆசு:10.1002/9783527626915.ch14 10.1002/9783527626915.ch14
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிறமி_139&oldid=2615518" இலிருந்து மீள்விக்கப்பட்டது