மஞ்சள் பார்வை
மஞ்சள் பார்வை (Xanthopsia) என்பது ஒரு வகையான பார்வைக் குறைபாடாகும். சாந்தோப்சியா என்ற பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது. கண்ணின் ஒளியியல் ஊடகம் மஞ்சள் நிறமாக மாறியதன் காரணமாக பார்வையில் மஞ்சள் நிறத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். சோடியம் பொட்டாசியம் அடினோசின் முப்பாசுபேட்டு நொதியின் டிகோக்சின் தடுப்பு நடவடிக்கை காரணமாக கண்களில் தோன்றும் கண்புரை வளர்ச்சி மஞ்சள் நிறத்தை வடிகட்டுகிறது என்பதே மஞ்சள் பார்வைக்கான பொதுவான காரணமாகும். இதய செயலிழப்பு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் டிகிட்டலிசு தாவரத்திலிருந்து இந்த டிகோக்சின் பெறப்படுகிறது.
ஓவியர் வான் கோவின் பல படைப்புகளில் காட்சிப்படுத்தப்பட்ட மஞ்சள் நிறத்திற்கு தூண்டப்பட்ட சாந்தோப்சியா நோயே காரணம் என்றும் கூறப்படுகிறது. [1]
மஞ்சள் காமாலை நோயினால் ஏற்படும் ஓர் அரிதான பக்க விளைவு மஞ்சள் பார்வை நோய் என்று கருதப்படுகிறது. மஞ்சள் காமாலையினால் மஞ்சள் நிறத்தை உருவாக்கப் போதுமான அளவு பிலிருபின் என்ற மஞ்சள் நிற வேதிப்பொருள் கண்ணுக்குள் படிய வைக்கப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vincent van Gogh". Psych.ucalgary.ca. Archived from the original on 2005-02-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.
- ↑ Weatherall, D. J.; Ledingham, J. G. G.; Warrell, D. A. (1996). Oxford Textbook of Medicine. 3rd ed. Oxford: Oxford University Press. 2055.
புற இணைப்புகள்
தொகு- Acquired Colour Vision Deficiencies —University of Calgary, Vision & Aging Lab