மஞ்சள் வரி காகிதக் குளவி
மஞ்சள் வரி காகிதக் குளவி (Ropalidia marginata) என்பது பழைய உலகைச் சேர்ந்த காகிதக் குளவி இனத்தைச் சேர்ந்த குளவி வகை ஆகும். இது சமூக உயிரினமாக கூட்டாக வாழும் இயல்பைக் கொண்டது.[1][2] இவற்றில் ராணிக் குளவி, பெண் குளவி, ஆண் குளவி, வேலைக்காக் குளவி போன்ற வேறுபாடுகள் உண்டு. இதன் கூடு காகிதத்தைப் போன்ற இழைகளால் அமைக்கப்பட்டிருக்கும். அவை தேன்கூட்டை ஒத்த அறுகோண வடிவில் அறைகள் கொண்டதாக இருக்கும். மூடப்படாத இந்தக் கூட்டுக் கூடு ஒன்று அல்லது இரண்டு முனைகளில் ஒட்டியிருக்கும்.
மஞ்சள் வரி காகிதக் குளவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Ropalidia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/RopalidiaR. marginata
|
இருசொற் பெயரீடு | |
Ropalidia marginata le Peletier, 1836 | |
Subspecies | |
|
விளக்கம்
தொகுஇந்தக் குளவிகளின் ஆரஞ்சு பழுப்பு நிற வயிற்றின் பின்பகுதியில் மஞ்சள் நிற வரியைப் போன்ற பட்டையைக்கொண்டிருக்கும். பொதுவாக இவை 1.5 செ.மீ. நீளம் கொண்டவையாக இருக்கும். இவை வேட்டையாடி உண்ணக்கூடியன. இனிப்பான திரவங்களையும் உறிஞ்சும். மூர்க்கமான இவை தூண்டப்பட்டால் கொட்டும். கொட்டினால் கடுமையாக வலிக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ van der Vecht, J. (1941). The Indo-Australian species of the genus Ropalidia (Icaria) (Hym., Vespidae), first part. Treubia Deel 18:103–190.
- ↑ van der Vecht, J. (1962). The Indo-Australian species of the genus Ropalidia (Icaria) (Hymenoptera, Vespidae), second part. Zool. Verhandelingen 57, 1–71.
- ↑ ஆதி வள்ளியப்பன் (7 ஏப்ரல் 2018). "கூடமைக்க இடம் தேடிவந்த குளவி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)