"பழைய உலகம்" (Old World) என்ற சொற்றொடர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா (ஆப்பிரிக்க-யூரேசியா) ஆகிய உலகப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1] உலகத்தின் எஞ்சிய பகுதிகளான அமெரிக்காக்கள், ஓசியானியா ஆகிய பகுதிகள் புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது.[2]

     பழைய உலகம்
"பழைய உலகத்தின்" வரைபடம் (தொலமியின் உலகப்படம், 15-ஆம் நூற்றாண்டு நகல்)

பழைய உலகம் பெரும்பாலும் கிழக்கு அரைக்கோளப் பகுதிகளைக் குறிக்கும். ஆனாலும், மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், போர்த்துகல், மேற்கு ஆப்பிரிக்கா ஆகியன பழைய உலக நாடுகளாகவே அடையாளம் காணப்படுகின்றன. அதே வேளையில், ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஓசியானிய கிழக்கு அரைக்கோளப் பகுதிகள் புதிய உலகமாக அடையாளம் காணப்படுகின்றன.

சொற்பிறப்பு தொகு

தொல்லியல் மற்றும் உலக வரலாற்று சூழலில், "பழைய உலகம்" என்ற சொல், வெண்கலக் காலத்தில் இருந்து (மறைமுகமான) கலாச்சார தொடர்பு கொண்டிருந்த உலகின் பகுதிகளை உள்ளடக்கியது, இதன் விளைவாக, பெரும்பாலும் மிதவெப்ப மண்டலத்தில் மத்திய தரைக்கடல், மெசொப்பொத்தேமியா, பாரசீகப் பீடபூமி, இந்திய துணைக்கண்டம் மற்றும் சீனா போன்ற பகுதிகளின் ஆரம்பகால நாகரிகங்கள் இணையான வளர்ச்சி கண்டன.

இந்தப் பிரதேசங்கள் பட்டுப் பாதை வணிக வழியால் இணைக்கப்பட்டு, வெண்கலக் காலத்தை அடுத்து இரும்புக் காலத்திலும் தொடர்ந்தது. கலாச்சார, மெய்யியல், மற்றும் சமய அபிவிருத்திகள் இறுதியில் மேற்கத்தைய எலனிசம், கீழைத்தேய (சொராட்டிரிய நெறி, ஆபிரகாமிய சமயங்கள்) மற்றும் தூரகிழக்கு (இந்து சமயம், பௌத்தம், சைனம், கன்பூசியம், தாவோயியம்) கலாச்சாரங்கள் தோன்ற வழிவகுத்தன.

வேறு பெயர்கள் தொகு

ஆப்பிரிக்க-யூரேசியாவின் பெருநிலப்பரப்பு (பிரித்தானியத் தீவுகள், யப்பான், இலங்கை, மடகாசுகர், மலாய் தீவுக்கூட்டம் போன்ற தீவுகள் நீங்கலாக) ஆப்பிரிக்க-யூரேசியா என அழைக்கப்படுகிறது. இச்சொல் சர் ஆல்ஃபோர்ட் ஜோன் மெக்கின்டர் என்பவரால் The Geographical Pivot of History என்ற நூலில் கொடுக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Old World". Merriam-Webster Dictionary.
  2. "New world". Merriam-Webster Dictionary.
  3. See Francis P. Sempa, Mackinder's World பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_உலகம்&oldid=3287777" இலிருந்து மீள்விக்கப்பட்டது