மஞ்சு பிரகாசு
மஞ்சு பிரகாசு (Manju Prakash) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடைமைக் கட்சியைச் (மார்க்சியம்) சேர்ந்த இவர் பக்சர் சட்ட மன்றத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1] 1990 [2] மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் [3] சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் இராம்தியோ வர்மாவும் பிபூதிபூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1] [4] மஞ்சு பிரகாசு பீகார் மகளிர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். 2020 ஆண்டிற்குப் பின்னர் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவிலிருந்து வெளியேறி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை கட்சியில் சேர்ந்தார். இவரது தந்தை சோதி பிரகாசும் ஒரு பொதுவுடைமை கட்சி உறுப்பினராவார். தலித் தலைவராக இருந்த அவர் உயர் சாதியனரான இராய் இனத்தவரால் கொல்லப்பட்டார். [1]
மஞ்சு பிரகாசு Manju Prakash | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1990–2000 | |
முன்னையவர் | சிறீகாந்து பதக் |
பின்னவர் | சுகதா பாண்டே |
தொகுதி | பக்சர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1965 (அகவை 58–59) |
அரசியல் கட்சி |
|
துணைவர் | இராம்தியோ வர்மா |
தேர்தல் பதிவு
தொகுமஞ்சு பிரகாசு 1985, [5] 1990, 1995, 2000, [6] 2010 [7] ஆம் ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் தனித்து சுயேட்சையாகவும் பிபூதிபூரில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்றார். 1990 மற்றும் 1995 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
ஆண்டு | பதிவான வாக்குகள் | சதவிதம் | மொத்த வாக்குகள் | வெற்றி விளிம்பு |
---|---|---|---|---|
1990 [2] | 19,522 | 23.20 | 84,139 | 1,058 |
1995 [3] | 41,757 | 41.27 | 101,178 | 22,507 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Jha, Sachchidan (February 29, 2000). "New House to have three more women MLAs". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
- ↑ 2.0 2.1 "Bihar 1990". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
- ↑ 3.0 3.1 "Bihar 1995". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13."Bihar 1995". Election Commission of India. Retrieved 13 November 2020.
- ↑ "बिहार चुनाव 2020: माकपा ने विभूतिपुर से छह बार विधायक रहे रामदेव वर्मा को पार्टी से निकाला". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
- ↑ "Bihar 1985". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
- ↑ "Bihar 2000". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
- ↑ "Bihar 2010". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.