2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்

(பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது மூன்று கட்டங்களாக 235 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல். முதல் கட்டம் 28 அக்டோபர் அன்று 71 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டம் நவம்பர் 3 அன்று 93 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டம் நவம்பர் 7 அன்று 78 தொகுதிகளுக்கு நடைபெறும். நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நவம்பர் 29 அன்று இப்போதுள்ள சட்டப் பேரவை முடிவுக்கு வருவதால் அதற்கு முன்பு தேர்தல் நடத்தி புதிய சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 25 அன்று தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. சென்ற தேர்தலில் ஐக்கிய சனதா தளம் மகாபந்தன் என்ற பெரும் கூட்டணியில் போட்டியிட்டு முதல்வர் பதவியை பெற்றது. எனினும் 2017இல் அக்கூட்டணியை விட்டு விலகி பாசகவின் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்தது. இத்தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கட்சி தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார் பிகார் மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2020 பீகார் சட்டமன்றத் தேர்தல்

← 2015 28 அக்டோபர் 2020 (2020-10-28) – 7 நவம்பர் 2020 (2020-11-07) 2025 →

பீகார் சட்டப் பேரவையில் 243 இடங்கள்
அதிகபட்சமாக 122 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்57.29% (0.38%)
  Majority party Minority party Third party
 
தலைவர் தேஜஸ்வி யாதவ் சஞ்சய் ஜெய்ஸ்வால் நிதிஷ் குமார்
கட்சி இரா.ஜ.த. பா.ஜ.க ஐஜத
கூட்டணி பெரும் கூட்டணி தே.ச.கூ தே.ச.கூ
தலைவரான
ஆண்டு
2017 2019 2005
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
இராகவ்பூர்
(வெற்றி)
- மேலவை
முந்தைய
தேர்தல்
80 53 71
வென்ற
தொகுதிகள்
75 74 43
மாற்றம் 5 21 28
மொத்த வாக்குகள் 9,738,855 8,202,067 6,485,179
விழுக்காடு 23.11% 19.46% 15.39%
மாற்றம் 4.79% 4.96% 1.44%

  Fourth party Fifth party Sixth party
 
தலைவர் மதன் மோகன் ஜா தீபன்கர் பட்டாச்சார்யா அக்தருள் இமான்
கட்சி காங்கிரசு இ.பொ.க. (மா-லெ) அ.ம.இ.மு
கூட்டணி பெரும் கூட்டணி பெரும் கூட்டணி பெரும் சனநாயக சமயசார்பற்ற முன்னனி
தலைவரான
ஆண்டு
2019 1996 2015
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- - அமூர்
(வெற்றி)
முந்தைய
தேர்தல்
27 3 0
வென்ற
தொகுதிகள்
19 12 5
மாற்றம் 8 9 5
மொத்த வாக்குகள் 3,995,319 1,333,682 523,279
விழுக்காடு 9.48% 3.16% 1.24%
மாற்றம் 2.82% 1.66% 1.03%

  மகாகத்பந்தன் : 110 இடங்கள்
  மற்றவர்கள் : 8 இடங்கள்

பீகார் மாநில தேர்தல் முடிவுகள் (தொகுதி வாரியாக)

முந்தைய முதலமைச்சர்

நிதிஷ் குமார்
ஐஜத

முதலமைச்சர் -தெரிவு

நிதிஷ் குமார்
ஐஜத

பட்டியல்

தொகு

செப்டம்பர் 25 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.[1]

தேர்தல் நிகழ்வு கட்டம்
I II III
தொகுதிகள் 71 94 78
மூன்று கட்டங்களாக நடைபெறும் தொகுதிகளின் வரைபடம்  
தேர்தல் அறிக்கை அறிவிக்கப்பட்டது 1 அக்டோபர் 2020 9 அக்டோபர் 2020 13 அக்டோபர் 2020
வேட்பு மனுவை அளிப்பதற்கான இறுதி நாள் 8 அக்டோபர் 2020 16 அக்டோபர் 2020 20 அக்டோபர் 2020
வேட்பு மனுவை சோதிக்கும் நாள் 9 அக்டோபர் 2020 17 அக்டோபர் 2020 21 அக்டோபர் 2020
வேட்பு மனுவை விலக்கிக்கொள்வதற்கான இறுதி நாள் 12 அக்டோபர் 2020 19 அக்டோபர் 2020 23 அக்டோபர் 2020
வாக்குப்பதிவு நாள் 28 அக்டோபர் 2020 3 நவம்பர் 2020 7 நவம்பர் 2020
வாக்கு எண்ணிக்கை 10 நவம்பர் 2020
மூலம்: Election Commission of India

கூட்டணி

தொகு

தேசிய சனநாயகக் கூட்டணி

தொகு

தேசிய சனநாயகக் கூட்டணியிலுள்ள ஐக்கிய சனதாதளத்தின் நிதிசு குமார் பீகாரின் முதல்வராக உள்ளார். சென்ற 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய சனதா தளம் பாசக உள்ள தேசிய சனநாயகக் கூட்டணியை எதிர்த்து மாபெரும் கூட்டணி எனப்படும் மகாகாத்பந்தன் கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது ராசுட்ரிய லோக் சமதா கட்சி, இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா என்ற இரு சிறிய கட்சிகள் தேசிய சனநாயகக் கூட்டணியில் பாசகவுடன் இருந்தன. 2017ஆம் ஆண்டு ஐக்கிய சனதாதளம் கூட்டணியை முறித்ததால் மகாகாத்பந்தன் கூட்டணி ஆட்சியை இழந்தது, பாசக ஆதரவு தெரிவித்தது அதனால் நிதிசு குமாரின் ஆட்சி தப்பி தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆட்சி மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு ராசுட்ரிய லோக் சமதா கட்சி, இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தேசிய சனநாயகக் கூட்டணியிலிருந்து விலகின.

2020 ஆகத்தில் இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா மீண்டும் தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்தது. பின்பு அக்டோபர் 2020 விக்காசீல் இன்சான் இக்கூட்டணியில் இணைந்தது.

2015 ஆம் ஆண்டு தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்த லோக் சனசக்தி கட்சி ஐக்கிய சனதாதளத்தை கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தமையால் இக்கூட்டணியில் சலசலப்பு உருவாகியது. இதனால் பாசகவின் தேசிய தலைவர்கள் லோக் சனசக்தியின் தலைவர் சிராக் பாசுவானை டெல்லிக்கு அழைத்து பேசியதின் விளைவால் லோக் சனசக்தி தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி சனதாதளம் போட்டியிடும் அனைத்து தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என்றும் பாசகவை எதிர்த்து போட்டியிடுவதில்லை என்றும் முடிவாகியது. இதைத்தொடர்ந்து பல பாசக தலைவர்கள் லோக் சனசக்தியில் இணைந்தார்கள். குறிப்பாக மாநில துணை தலைவரும் தற்போது சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள இருவர் ஐக்கிய சனதாதளத்தை எதிர்க்க இணைந்தார்கள். பாசக அதிகாரபூர்வமாக லோக் சனசக்தியுடனான உறவை அக்டோபர் 2020 முறித்தது.

அரசியல் விமர்சிகர்கள் தனியாக போட்டியிடுவதால் லோக் சனசக்தி கட்சி சில தொகுதிகளை கூடுதலாக வெல்லமுடியாது எனவும் அவர்கள் போட்டியிடுவது ஐக்கிய சனதா தளத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கவே என்றும் , தேர்தல் முடிவில் ஐக்கிய சனதா தளம் அதிக தொகுதிகள் பெற்று அவர்கள் கை மேலோங்குவதை தடுக்கவே பாசக இதை பின்னால் இருந்து இயக்கிறது என்று கருதுகிறார்கள். அதே சமயம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிசு குமாரையே காட்டுகிறார்கள்.

எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
1. ஐக்கிய சனதா தளம்       நிதிசு குமார் 115[2]
2. பாசக     சஞ்சய் செய்சுவால்[3] 110[4]
3. விக்காசீல் இன்சான் கட்சி முகேசு சானி 11[4]
4. இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா       சீதன் ராம் மாஞ்சி 7
பீகார் தவிர்த்து தேசிய சனநாயக கூட்டணியில் உள்ளது
5. லோக் சனசக்தி கட்சி[5][6]       சிரக் பஸ்வான் 134

மகாகாத்பந்தன்

தொகு

மகாகாத்பந்தன் என்ற பெருங்கூட்டணியில் ஐந்து கட்சிகள் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள ராசுட்டிரிய சனதா தளமும் இந்திய தேசிய காங்கிரசும் முதன்மையானவை. இடதுசாரி கட்சிகளும் இதில் உள்ளன.[7][8]

சென்ற 2015ஆம் ஆண்டு தேர்தலில் இக்கூட்டணியில் ஐக்கிய சனதா தளமும் இணைந்திருந்தது. இக்கூட்டணி அமைத்த அரசில் ஐக்கிய சனதா தளத்தின் நிதிசு குமார் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். 2017ஆம் ஆண்டு இக்கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய சனதா தளம் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்ததை தொடர்ந்து இக்கூட்டணி அரசு ஆட்சியை இழந்தது. 2018இல் விக்காசீல் இன்சான் கட்சியும் இந்துசுத்தானி அவாமி மோர்ச்சாவும் 2019 சனவரியில் ராசுட்டிரிய சமதா கட்சியும் இக்கூட்டணியில் இணைந்தன .[9][10] ஆனால் 2020 ஆகத்து-அக்டோபரில் இவ்மூன்று கட்சிகளும் இக்கூட்டணியில் இருந்து விலகின.[11][12][13] 2015 தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஓர் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாததால் இம்முறை சமாச்வாதி கட்சி போட்டியிடாமல் இராசுட்டிரிய சனதா தளத்திற்கு ஆதரவு தருவதாக 2020 செப்டம்பர் அறிவித்தது.[14]

இத்தேர்தலில் இக்கூட்டணியுடன் இணைய இடதுசாரிகளான விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி , இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.[15][16] இதைத்தொடர்ந்து சாதி அடிப்படையில் மட்டும் தொகுதிகளை பிரிக்காமல் சோதனை முயற்சியாக சாதியும் வர்க்கமும் என்ற அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கலாம் என்று முடிவானது.[17] மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு வந்ததும் பொதுவுடமை கட்சிகளின் செல்வாக்கு குறையத்தொடங்கியது. ஆனாலும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி தன் செல்வாக்கை சில பகுதிகளில் இழக்காததால் 2015 தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சியாக இருந்தது.[18][19] அக்டோபர் 3 சார்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது [20] ஆனாலும் அக்டோபர் 7 சார்கண்ட் முக்தி மோர்ச்சா விலகிக்கொண்டது.

எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
1. இராச்டிரிய ஜனதா தளம்     தேஜஸ்வி யாதவ் 144[21]
2. இந்திய தேசிய காங்கிரசு     மதன் மோகன் சா 70
3. விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) திபன்கர் பட்டாச்சாரியா 19
4. இந்திய பொதுவுடமைக் கட்சி     ராம் நரேசு பாண்டே[22] 6
5. இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)     அவதேசு குமார் 4

முடிவு

தொகு
கூட்டணி கட்சி பெற்ற வாக்குகள் தொகுதிகள்
வாக்குகள் % ±பெற்று வாக்கு % போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் +/−
தேசகூ ஐக்கிய சனதா தளம் 6,484,414 15.39%  1.44% 115 43   28
பாசக 8,201,408 19.5%  4.96% 110 74   21
விக்காசீல் இன்சான் கட்சி 639,840 1.52%  1.52% 11 4   4
இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா 375,564 0.89%  1.41% 7 4   3
மகாகாத்பந்தன் இராச்டிரிய சனதா தளம் 9,736,242 23.11%  4.79% 144 75   5
இந்திய தேசிய காங்கிரசு 3,995,003 9.5%  2.82% 70 19   8
விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) 1,322,143 3.14%  1.58% 19 12   9
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 349,489 0.83%  0.57% 6 2   2
இந்திய மார்க்சிய பொதுவுடமை கட்சி 274,155 0.65%  0.05% 4 2   2
பெசமு இராசுட்டிரிய லோக் சமதா கட்சி 744221 1.77%  0.82% 104 0
பகுசன் சமாச் கட்சி 628944 1.49%  0.60% 80 1   1
சனநாயக சமாச்வாதி சனதா தளம் 25 0
அனைத்திந்திய மஜ்லிசே இ முசுலிமீன் 523,279 1.24%  1.03% 20 5   5
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி 5 0
சமத்துவ சனவாடி கட்சி 5 0
சமுகூ சன் அதிகார் கட்சி (லோக்தந்திரிக்) 0
ஆசாத் சமாச் கட்சி 30 0
இந்திய சமத்துவ சனநாயக கட்சி 0
பகுசன் முக்தி கட்சி 0
கூட்டணியில் இல்லாதவை லோக் சனசக்தி கட்சி 2,383,457 5.66%   0.77% 134 1   1
லோக்தந்திரிக் சனதா தளம் 51 0
சிவ சேனா 20,195 0.05%   0.51% 23 0
தேசியவாத காங்கிரசு கட்சி 94,835 0.06%   0.26% 145 0
சார்கண்ட் முக்தி மோர்ச்சா 25,213 0.06%   0.22% 7 0
கட்சி சார்பற்றவர் 1   3
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) 706,252 1.68% - -
மொத்தம் 100.00 243
செல்லுபடியான வாக்குகள்
செல்லாத வாக்குகள்
வாக்கு செலுத்தியவர்கள்
வாக்கு செலுத்தாதவர்கள்
வாக்கு செலுத்த தகுதியானவர்கள்

முதலமைச்சர் தேர்வு

தொகு

இத்தேர்தல் முடிவில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார், பிகார் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[23]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bihar assembly elections live updates: 3-phase Bihar polls on Oct 28, Nov 3 and Nov 7". 25 September 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Swarup, Vijay (2020-10-06). "Bihar assembly election 2020: NDA seat-sharing pact sealed, Nitish Kumar jabs ex-ally Chirag Paswan". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. Gyan Varma, Anuja (2020-10-07). "JD(U), BJP seal Bihar seat-sharing deal; Nitish to lead front". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. 4.0 4.1 "BJP spares 11 seats to associate partner VIP from its quota in Bihar polls". Outlook India. 7 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. Mishra, Dipak (2020-10-11). "LJP affiliates want Chirag Paswan in Modi cabinet after dad's death, BJP says it's PM's call". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
  6. Ghargi, Arti (2020-10-16). "LJP Trying To Mislead By Naming BJP's Top Leadership: Prakash Javadekar". HW English (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. Kumar, Abhay (2020-06-10). "Ahead of Bihar polls, Mahagathbandhan may dump three of its allies". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. Naqshbandi, Aurangazeb (2020-10-02). "RJD-Congress close to sealing seat talks in Bihar, announcement soon". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. "RLSP chief Kushwaha joins UPA in Bihar, becomes part of Mahagathbandhan". Business Standard India. Press Trust of India. 2018-12-20. https://www.business-standard.com/article/elections/rlsp-s-upendra-kushwaha-joins-upa-in-bihar-becomes-part-of-mahagathbandhan-118122000664_1.html. 
  10. Kumar, Manish (23 December 2018). "कौन हैं ये मुकेश साहनी जो कह रहे हैं 'माछ भात खाएंगे महागठबंधन को जिताएंगे'" [Who is this Mukesh Sahani saying "will eat Fish-Rice and give victory to Mahagathbandan"]. NDTV India. Archived from the original on 2020-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  11. "Pappu Yadav promises corruption-free Bihar in six months" (in en-IN). The Hindu. 2020-09-25. https://www.thehindu.com/news/national/other-states/pappu-yadav-promises-corruption-free-bihar-in-six-months/article32690228.ece. 
  12. Swaroop, Vijay (2020-08-20). "Jitan Ram Manjhi-led HAM-S exits Grand Alliance ahead of Bihar assembly polls". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  13. "महागठबंधन में टूट: कॉन्फ्रेंस में बोले VIP चीफ - पीठ में छुरा मारा" [Break in Mahagathbandan: VIP chief in conference says backstabbed]. TheQuint (in இந்தி). 2020-10-03. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  14. "SP to support RJD in Bihar polls" (in en-IN). The Hindu. 2020-09-23. https://www.thehindu.com/elections/bihar-assembly/sp-to-support-rjd-in-bihar-polls/article32675348.ece. 
  15. Verma, Nalin (29 August 2020). "Will an RJD-Congress-Left Alliance Ride the Anti-Incumbency Wave in Bihar?". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  16. Nair, Sobhana K. (2020-09-26). "Bihar Assembly elections | Mahagatbandhan narrows down its seat sharing formula" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/bihar-assembly/bihar-assembly-elections-mahagatbandhan-narrows-down-its-seat-sharing-formula/article32704026.ece. 
  17. Tiwari, Amitabh (2020-10-07). "Bihar Polls 2020: Will Tejashwi's 'Caste-Class' Strategy Succeed?". The Quint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  18. Mazumdar, Gautam (2020-10-06). "JMM to go solo in Bihar polls, accuses RJD of 'political betrayal'". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  19. Verma, Nalin (26 August 2020). "Will an RJD-Congress-Left Alliance Ride the Anti-Incumbency Wave in Bihar?". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.{{cite web}}: CS1 maint: url-status (link)
  20. Tewary, Amarnath (2020-10-03). "Bihar Assembly elections | Mahagathbandhan seals seat-sharing deal" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/bihar-assembly/bihar-assembly-elections-mahagathbandhan-clinches-seat-sharing-deal/article32760480.ece. 
  21. "Bihar polls: Tejashwi announces Grand Alliance's seat-sharing deal, Congress to contest from 70 seats". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-03.{{cite web}}: CS1 maint: url-status (link)
  22. "Bihar polls: CPI announces candidates in its quota of six seats". Deccan Herald. Agence France-Presse. 4 October 2020. https://www.deccanherald.com/national/east-and-northeast/bihar-polls-cpi-announces-candidates-in-its-quota-of-six-seats-897234.html. 
  23. Bihar elections 2020: Nitish Kumar named Bihar CM; to take oath for 4th straight term