பகுஜன் சமாஜ் கட்சி

இந்திய அரசியல் கட்சி
(பகுசன் சமாச் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பகுஜன் சமாஜ் கட்சி (பகுசன் சமாச் கட்சி) ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984ல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001 ல் கன்ஷிராம் தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி
Bahujan Samaj Party
தலைவர்மாயாவதி
தொடக்கம்1984
தலைமையகம்12, குருத்வாரா ராகப்காஞ் சாலை, புது தில்லி - 110001
மாணவர் அமைப்புபகுஜன் சமாஜ் மாணவர் பேரவை
இளைஞர் அமைப்புபகுஜன் சமாஜ் யுவ மோர்ச்சா
கொள்கைதலித் சமவுடமை
மதசார்பற்ற
சமூக மாற்றம்
அரசியல் நிலைப்பாடுCentre
நிறங்கள்  நீலம்
இ.தே.ஆ நிலைதேசிய அரசியல் கட்சி[1]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
தேர்தல் சின்னம்
Bahujan Samaj party symbol
இணையதளம்
bspindia.org
இந்தியா அரசியல்

13வது மக்களவையில் (1999-2004) இதற்கு 14 இடங்கள் கிடைத்தது, தற்போதய 14வது மக்களவையில் இதற்கு 19 இடங்கள் உள்ளன. இதன் தலைவராக மாயாவதி உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இக் கட்சி மற்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசத்தில் பலமாக உள்ளது. 2014ல் நடந்த 16வது மக்களவையில் இக்கட்சி ஒரு இடத்தையும் வெல்லவில்லை.

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுஜன்_சமாஜ்_கட்சி&oldid=4034670" இலிருந்து மீள்விக்கப்பட்டது