கன்சிராம்

இந்திய அரசியல்வாதி
(கான்ஷிராம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கன்சிராம் (Kanshi Ram) (15 மார்ச் 1934 – 9 அக்டோபர் 2006) இந்திய அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியுமாக இருந்தவர். தலித் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசியல் ரீதியாகத் தலித்துகளை ஓன்று திரட்டப் பாடுபட்டவர். கன்சிராம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 1984 ஆம் ஆண்டு, அம்பேத்கர் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கட்சியான பகுசன் சமாச் கட்சியினைத் துவங்கினார். இவருடைய வழிவந்த மாயாவதி நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்சிராம், தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார்.

கன்சிராம்
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர்
பதவியில்
1984–1995
பின்னவர்மாயாவதி குமாரி
இந்தியன் நாடாளுமன்றம்
for ஹோஷியார்பூர்
பதவியில்
1996–1998
முன்னையவர்கமல் சவுத்திரி
பின்னவர்கமல் சவுத்திரி
இந்தியன் நாடாளுமன்றம்
for இட்டாவா
பதவியில்
1991–1996
முன்னையவர்ராம்சிங் சாக்கியா
பின்னவர்ராம்சிங் சாக்கியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மார்ச் 1934
பஞ்சாப்[1]
இறப்பு9 அக்டோபர் 2006
புது தில்லி
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
இணையத்தளம்Official Site

கன்சிராம் அம்பேத்கரின் ஐம்பதாவது நினைவு நாளான அக்டோபர் 14 ஆம் நாளன்று சமயத்தைத் தழுவ இருந்தார் ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அக்டோபர் 9 அன்று இறந்தார்.[2] ஆனால் அவரின் இறுதிச் சடங்குகள் பௌத்த சமயத்தின் படி நடந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kanshiram was born in Pirthipur Bunga village, Khawaspur, Ropar district, on 15 March 1934, to Bishan Kaur and Hari Singh.". http://timesofindia.indiatimes.com/news/Will-never-vote-for-BSP-vow-Kanshi-Ram-siblings/articleshow/34084694.cms. 
  2. "Mayawati claims Kanshi Ram's legacy". ரீடிப். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 29, 2016.

புற இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்சிராம்&oldid=3958443" இலிருந்து மீள்விக்கப்பட்டது