ஹோஷியார்பூர்
ஹோஷியர்பூர் இந்திய மாநிலமான பஞ்சாப்பின் ஹோஷியர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சிகளில் ஒன்று; இது ஜலந்தர் வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்டது. பஞ்சாபின் தோபா பகுதியில் உள்ள ஹோஷியாபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரம்பரியத்தின்படி நிறுவப்பட்டது. 1809-ஆம் ஆண்டில் இது மகாராஜா கரன்வீர் சிங்கின் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு 1849-ஆம் ஆண்டில் பெரிய பஞ்சாப் மாநிலத்துடன் ஒன்றுபடுத்தப்பட்டது.[1]
ஹோஷியார்பூர் சராசரியாக 296 மீட்டர் (971 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்திய மாநிலமான பஞ்சாபின் வடகிழக்கு பகுதியில் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தோபா பிராந்தியத்தின் பிஸ்ட் தோவாப் பகுதியில் ஜலந்தர் வருவாய் பிரிவிக்கு உட்பட்டது. ஹோஷியார்பூர் வடகிழக்கு எல்லையை இமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்துடனும், கங்கரா மாவட்டத்துடனும் பகிர்ந்து கொள்கிறது. ஷாஹித் பகத் சிங் நகர் மாவட்டம், ஜலந்தர் மாவட்டம் மற்றும் கபுர்தலா மாவட்டம் ஆகியவைகளுடன் தென்மேற்கு எல்லையாகவும், குர்தாஸ்பூர் மாவட்டத்துடன் வட மேற்கு எல்லையாகவும் அமைந்துள்ளது.
சனத்தொகை
தொகு2011 ஆம் ஆண்டில் சனத்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக தரவுகளின்படி, ஹோஷியார்பூரில் 168,443 மக்கள் வசிக்கின்றனர். அதில் 88,290 ஆண்கள் மற்றும் 80,153 பெண்கள் அடங்குவர். மக்களின் கல்வியறிவு விகிதம் 89.11 சதவீதமாக காணப்பட்டது.[2]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஹோஷியார்பூரில் 189,371 வாழ்கின்றனர்.[3] அதில் ஆண்கள் 50.9% வீதமும், பெண்கள் 49.1% வீதமுமாக காணப்பட்டனர். ஹோஷியார்பூரின் சராசரி கல்வியறிவு 85.40% வீதம் ஆகும். ஆண்களின் கல்வியறிவு 89.90% வீதமாகவும், பெண்களில் 80.80%. வீதமாகவும் இருந்தது. 2001 ஆம் ஆண்டில் கல்விறிவு 81.00% வீதமாக காணப்பட்டது. ஹோஷியார்பூரில் 10% வீதமானோர் 11 வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்கள். இங்கு மக்கள் தொகையடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 396 நபர்கள் ஆகும். 2001 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011 ஆம் ஆண்டில் சனத்தொகை 7.1% வீதமாக அதிகரித்துள்ளது.[4]
போக்குவரத்து
தொகுஹோஷியார்பூரில் பகவான் வால்மீகி இன்டர்ஸ்டேட் பஸ் டெர்மினல் எனப்படும் பேருந்து சேவைகள் இயங்குகின்றன. பஞ்சாப் வழி சாலைகள், இமாச்சல சாலைவழிகள், டெல்லி, ஹரியானா சாலைகள், பிஆர்டிசி, சண்டிகர், சம்மு மற்றும் காஷ்மீர் சாலைகள், ராஜஸ்தான் மாநில சாலைகள் என்பவற்றுக்கான பரந்தளவிலான சேவைகளை கொண்டுள்ளன.[5]
கல்வி
தொகுகுரு ரவிதாஸ் ஆயுர்வேத் பல்கலைக்கழகம், ஹோஷியார்பூர்
பஞ்சாப் பல்கலைக்கழகம் சுவாமி சர்வானந்த் கிரி பிராந்திய மையம்
ராயத் பஹ்ரா பல்கலைக்கழகம் (போஹன் ஹோஷியார்பூருக்குப் பின்)
கல்லூரிகள்
தொகுடிஏவி கல்லூரி ஹோஷியார்பூர்
பண்டிட். ஜே.ஆர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஜல்லந்தர் சாலை
மகளிர் நலக் கல்லூரி, வசந்த் விஹார்
சேத்ரா பியாரா சிங் செஹ்ரா வணிகக் கல்லூரி, கோட்வாலி பஜார்
எஸ் டி சமஸ்கிருத கல்லூரி, பகதூர்பூர் சி.வி.கே.
அரசு. கல்லூரி ஹோஷியார்பூர்.
ஸ்ரீ குரு கோபிந்த் சிங் கால்சா கல்லூரி மஹில்பூர்
திருமதி. உர்மிளா தேவி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை
மருத்துவமனைகள்
தொகுசிவம் மருத்துவமனை
பரியானா கண் மருத்துவமனை
குலாட்டி மருத்துவமனை மற்றும் மகப்பேறு இல்லம்
சைனி மருத்துவமனை
மத்திய மருத்துவமனை
ரவ்ஜோட் இருதய மையம்
செயின்ட் ஜோசப்ஸ் மருத்துவமனை
கோயல் மருத்துவமனை
சிவில் மருத்துவமனை
கே.டி.எம் மருத்துவமனை
பூர்வால் மருத்துவமனை
அமிதோஜ் மருத்துவமனை
கண் மருத்துவமனை
குறிப்புகள்
தொகு- ↑ "Hoshiarpur", 1911 Encyclopædia Britannica, Volume 13, பார்க்கப்பட்ட நாள் 2019-11-02
{{citation}}
:|volume=
has extra text (help) - ↑ ""Urban Agglomerations/Cities having population 1 lakh and above"" (PDF).
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ ""Jat Sikhs: A Question of Identity"".
- ↑ "PEPSU Road Transport Corporation, Patiala". Archived from the original on 2017-01-12.
வெளியிணைப்பு
தொகுஅரசு தளம் பரணிடப்பட்டது 2021-01-27 at the வந்தவழி இயந்திரம்