கபூர்தலா மாவட்டம்
கபூர்தலா மாவட்டம் (Kapurthala district) (பஞ்சாபி|ਕਪੂਰਥਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கபுர்த்தலா ஆகும். கபூர்தலா மாவட்டத்தின் நிலப்பரப்புகள் ஜலந்தர் மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ளது. இது சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் ஒரு சுதேச மாநிலமாக இருந்தது, இது அலுவாலியா சீக்கிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. கபூர்தலா கொடி இரண்டு வண்ண பின்னணியைக் கொண்டுள்ளது, இன்ஸ்க்னியா மற்றும் மோட்டோவுடன் "புரோ ரீஜ் எட் பேட்ரியா" (லத்தீன் மொழியில்) "மன்னன் மற்றும் நாட்டிற்கு" என்ற வார்த்தைகளுடன் இருக்கிறது.
கபூர்தலா
ਕਪੂਰਥਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
மாவட்டம் | |
பஞ்சாப் மாநிலத்தில் கபூர்தலா மாவட்ட அமைவிடம், இந்தியா | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
பெயர்ச்சூட்டு | நவாப் கபூர் சிங் |
Headquarters | கபுர்தலா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,633 km2 (631 sq mi) |
மக்கள்தொகை (2011)‡[›] | |
• மொத்தம் | 8,15,168 |
• அடர்த்தி | 500/km2 (1,300/sq mi) |
இனம் | பஞ்சாபியர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
எழுத்தறிவு | 79.07 % |
இணையதளம் | www |
இம்மாவட்டத்தில் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகள் பாய்கிறது. இம்மாவட்டத்தின் பொருளாதாரம் கோதுமை, நெல், கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற வேளாண் விளைபொருட்களைச் சார்ந்துள்ளது. இம்மாவட்டம் கோடைக்காலத்தில் கடும் வெப்பமும்; குளிர்காலத்தில் கடும் குளிரையும் கொண்டுள்ளது. கபூர்தலா ஒரு காலத்தில் கபூர்தலா மாநிலத்தின் தலைநகராக இருந்தது,
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் கபூர்தலா, பக்வாரா மற்றும் சுல்தான்பூர் லோடி என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 815,168 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 65.35% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 34.65% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.04% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 426,311 ஆண்களும் மற்றும் 388,857 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 1,633 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 499 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 79.07 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.15 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 74.63 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 86,025 ஆக உள்ளது.[1] [2]
சமயம்
தொகுஇம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 453,692 (55.66 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 336,124 (41.23 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 10,190 (1.25 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.
மொழிகள்
தொகுபஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kapurthala District : Census 2011 data
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
வெளி இணைப்புகள்
தொகு- கபூர்தலா மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2005-11-26 at the வந்தவழி இயந்திரம்