பியாஸ் ஆறு
பியாஸ் ஆறு இமாச்சலப் பிரதேசத்தில் உற்பத்தியாகி 470 கிமீ தொலைவு ஓடி பஞ்சாப் [1] மாநிலத்தை வளம் கொழிக்க செய்து சத்லஜ் ஆற்றுடன் கலக்கிறது. மணாலி இவ்வாற்றின் கரையில் உள்ள நகராகும். பியாஸ் என்ற பெயர் இந்து சமயத்தின் பெரும் காப்பியங்களில் ஒன்றான மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவரின் பெயரில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இவ்வாற்றை விபாசா என்றும் அழைகின்றனர். மாவீரர் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பின் கிழக்கு எல்லையாக பியாஸ் ஆறு அமைந்திருந்தது. பியாஸ் ஆறு இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ரோட்டங் பாஸ் என்ற இடத்தில் தோன்றி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹரிக்கே என்னும் இடத்தில் சத்லஜ் ஆற்றுடன் கலக்கிறது. பியாஸ் ஆற்றின் நீர் சிந்து நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவினால் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் பாயும் பியாஸ் ஆறு குர்தாஸ்பூர்-ஹோசியர்பூர் மாவட்ட எல்லையாகவும், குர்தாஸ்பூர்-கபுர்தலா மாவட்ட எல்லையாகவும், அம்ரித்சர்-கபுர்தலா மாவட்ட எல்லையாகவும் உள்ளது. பியாஸ் ஆறு கலக்கும் ஹரிக்கே அம்ரித்சர் மாவட்டத்தின் தெற்கே பெரேஷ்பூர், அம்ரித்சர் மற்றும் கபுர்தலா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
வெளி இணைப்பு
தொகு- அம்ரித்சர் மாவட்டத்தின் வரைபடத்தில் பியாஸ் ஆறு பரணிடப்பட்டது 2008-10-07 at the வந்தவழி இயந்திரம்
- குர்தாஸ்பூர் மாவட்டத்தின் வரைபடத்தில் பியாஸ் ஆறு
- ↑ "About District". Archived from the original on 2005-08-02. பார்க்கப்பட்ட நாள் 2016-06-27.