சிந்து நீர் ஒப்பந்தம்

சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960 ல் ஏற்பட்டதாகும். அப்போதய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் ஒப்பமிட்டது.[1]

இதன் படி சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்கு பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்கு பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன. இதன் படி கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது. கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காக பாகிஸ்தானுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

இவ்விரு நாடுகளும் இவ்வொப்பந்தம் தொடர்பான தரவுகளை பரிமாறி கொள்ளவும் ஒத்துழைக்கவும் நிரந்தரமான ஓர் ஆணையத்தை ஏற்படுத்தின. அது சிந்து ஆணையம் என அழைக்கப்பட்டது. இவ்விரு நாடுகள் சார்பிலும் ஒரு ஆணையர் அதற்கு நியமிக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Indus Waters Treaty

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_நீர்_ஒப்பந்தம்&oldid=3869241" இலிருந்து மீள்விக்கப்பட்டது