ஹோசியார்பூர் மாவட்டம்

இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம்

ஹோசியார்பூர் மாவட்டம் (Hoshiarpur District) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஹோசியார்பூர் மாநகராட்சி ஆகும்.

ஹோசியார்பூர்
ਹੁਸ਼ਿਆਰਪੁਰ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
வடமேற்கு பஞ்சாபில் ஹோசியார்பூர் மாவட்டம்
பஞ்சாபில் ஹோசியார்பூர் மாவட்ட அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
தலைமையிடம்ஹோசியார்பூர்
பரப்பளவு
 • மொத்தம்3,386 km2 (1,307 sq mi)
மக்கள்தொகை
 (2011)‡[›]
 • மொத்தம்15,86,625
 • அடர்த்தி470/km2 (1,200/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
எழுத்தறிவு84.60%
இணையதளம்hoshiarpur.nic.in

மாவட்ட நிர்வாகம்

தொகு

ஜலந்தர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம், ஹோசியார்பூர், தசுயா, கர்சங்கர், முக்கேரியன் என நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஹோசியார்பூர் I, ஹோசியார்பூர் II, புங்கா, தசுயா, தண்டா, முக்கேரியன், தல்வாரா, ஹாஜிப்பூர், மகில்பூர், கர்சங்கர் என பத்து ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.

இம்மாவட்டம் ஹோஷியர்பூர் மாநகராட்சி, தண்டா, தசுகியா, முக்கேரியன் கர்திவாலா, சாம் சௌரசி, கர்சங்கர் என எழு நகராட்சிகளையும், மஹால்பூர், தல்வாரா என இரண்டு நகரப் பஞ்சாயத்துகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் 1416 கிராமங்கள் உள்ளது.

அரசியல்

தொகு

இம்மாவட்டம் சப்பெவால், தௌசா, கர்சங்கர், ஹோசியார்பூர், முக்கேரியன், சாம் சௌரசி, உர்மர், என ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15,86,625 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் % மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் % வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 7.1% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,09,057 ஆண்களும் மற்றும் 7,77,568 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். 3386 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 469 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 84.6% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.8% % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.3% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 5,57,504 ஆக உள்ளனர். [1] மாவட்ட மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 34% ஆக உள்ளனர்.

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 33.92% ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 63.07% ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 1.46% ஆகவும், கிறித்தவ மக்கள் தொகை 0.94% ஆகவும், , பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.[2]

மொழிகள்

தொகு

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

பொருளாதாரம்

தொகு

ஹோசியார்பூர் மாவட்டம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியதாக அறிவிக்கப்பட்ட 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாகும். எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிதியுதவி செய்கிறது.[3]

புகழ் பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [ http://nripunjab.gov.in/hoshiarpur-district.htm Hoshiarpur]
  2. http://www.censusindia.gov.in/2011census/C-01/DDW03C-01%20MDDS.XLS
  3. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோசியார்பூர்_மாவட்டம்&oldid=3890864" இலிருந்து மீள்விக்கப்பட்டது