மஞ்சு ரே (Manju Ray) மூலக்கூறு என்சைமாலஜி மற்றும் புற்றுநோய் உயிர்வேதியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இந்திய விஞ்ஞானி ஆவார். அவரது ஆராய்ச்சி புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் வளர்ச்சிக்கும் உயிரணுக்களின் வேறுபாடு செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்துள்ளது. [1] அவரது ஆர்வங்களில் கட்டி உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூறு நொதியியல் ஆகியவை அடங்கும். [2] 1989 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு வழங்கப்பட்டது, 'உயிரியல் அறிவியல்' பிரிவில் இந்த விருதைப் பெற்ற இரண்டாவது பெண்மணி ஆவார். [3]

மஞ்சு ரே
பிறப்பு1 சனவரி 1947
சயாசுதி, வங்காளதேசம்
இறப்பு30 சூன் 2021
கொல்கத்தா
கல்விஇராஜாபசார் அறிவியல் கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிஉயிர்வேதியியலார்
அறியப்படுவதுமூலக்கூறு உயிரியல் மெத்தில்கிளையாக்சல் உயிர்வேதியியல்
வாழ்க்கைத்
துணை
சுபாங்கர் ரே
பிள்ளைகள்இசிகா ரே, எகாஎசி ரே
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1989)

கல்வி தொகு

ரே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அறிவியல் கல்லூரி வளாகத்தில் 1969-இல் உடலியங்கியலில் முதுநிலை அறிவியல் பட்டமும் 1975-இல் உயிர் வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஆராய்ச்சி தொகு

ரே, இந்திய அறிவியல் சாகுபடி சங்கத்தின் உயிர் வேதியியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியினைத் தொடங்கினார். திசம்பர் 2010 முதல், கொல்கத்தாவில் உள்ள போஸ் நிறுவனத்தில் தகைசால் அறிவியலாளராக இருந்தார்.[2] ரேயின் ஆராய்ச்சி, வளர்சிதை மாற்ற வினைகளின் பகுதிப் பொருட்களான மெத்தில்கிளையாக்சலின் உயிரியல் பயன்பாடு குறித்தது. இவரது தொழில் முறை வாழ்க்கையில், இவரும் இவரது குழுவும் தனிமைப்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட மெத்தில்கிளையாக்சல் சிதைவு மற்றும் சிதைமாற்றத்தில் ஈடுபட்டுள்ள நொதிகளின் வரிசையை வகைப்படுத்துதல் ஆகும். மருத்துவ பரிசோதனைகளின் முதல் கட்டத்தில் நேர்மறையான முடிவுகள் காணப்பட்ட நிலையில், மெத்தில்கிளையாக்சலின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைப் படிப்பதிலும் இவர் கவனம் செலுத்தினார்.[4]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Manju Ray". Indian Association for the Cultivation of Science. Archived from the original on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  2. 2.0 2.1 "Noted Women Scientists of India – an attempt at enumeration". SciLogs. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  3. "Shanti Swarup Bhatnagar Awardees | Women in Science | Initiatives | Indian Academy of Sciences". பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  4. Ukil, Amit. "Hope For Cancer Patients In Calcutta Team's Drug Trials". The Telegraph, India. https://www.telegraphindia.com/india/hope-for-cancer-patients-in-calcutta-team-s-drug-trials/cid/931442. பார்த்த நாள்: 1 November 2015. 
  5. "Dr". niper.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  6. "Manju Ray – Bose Institute, India – Indo Cancer Summit 2015 – Conferenceseries". cancer.global-summit.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_ரே&oldid=3922663" இலிருந்து மீள்விக்கப்பட்டது