மஞ்சு லதா கலாநிதி
மஞ்சு லதா கலாநிதி (Manju Latha Kalanidhi) என்பவர் ஓர் இந்தியப் பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் ஆவார். இவர் ஏழைகளுக்கு உணவு வழங்கும் நோக்கத்துடன் அரிசி வாளி அறைகூவல் எனும் நிகழ்வினைத் தோற்றுவித்தார்.[1][2][3] இவர் தற்போது ஐதராபாத்து நகரச் செய்தி ஆசிரியராக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசு பத்திரிக்கையில் ஐதராபாத்தில் பணியாற்றுகின்றார்.
இளமை
தொகுமஞ்சு லதா கலாநிதி, வாரங்கல் காசிப்பேட்டையில் உள்ள புனித ஆன் பள்ளியில் படித்தார். கலாநிதி சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில் ஊடகவியலில் முதுகலை பட்டயப்படிப்பினை முடித்தார்.
தொழில்
தொகுமஞ்சு லதா பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையை தி டெக்கான் குரோனிக்கள் நிறுவனத்தில் தொடங்கினார். இது ஐதராபாத்தைத் தளமாகக் கொண்ட மிகப்பெரிய தினசரி ஆங்கிலச் செய்தித்தாள் ஆகும். இங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் லதா, பிக் ஐதராபாத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். இவர் வாவ்! ஐதராபாத்து எனும் மருத்துவர் ரெட்டி அறக்கட்டளை வெளியிடும் வாழ்க்கை முறை இதழிலும் பணியாற்றினார். இவர் ஒரு இணையழவி ஊடகமான முற்போக்கான எண்ணிம ஊடகத்திலும் பணியாற்றினார். பின்னர், இவர் ஆங்கில நாளிதழான தி ஹான்ஸ் இந்தியாவில் ஆசிரியராகச் சேர்ந்தார். இங்கு இவர் தினசரி மற்றும் வாராந்திர அம்சங்களைக் கையாளப் பழகினார். ஹான்ஸ் இந்தியாவின் கல்வி இணைப்பான யங் ஹான்ஸையும் இவர் வழிநடத்தினார். மஞ்சு Oryza.com எனும் இணைய அடிப்படையிலான அரிசி ஆராய்ச்சி இதழில், அரிசி வாளி சவால் யோசனை[4] இவரது மனதில் தோன்றியது. பின்னர், தி நியூ இந்தியன் எக்சுபிரசில் முழுநேரப் பணியினை மேற்கொண்டார்.
தனது வேலையின் ஒரு பகுதியாக Oryza.com, இவர் நெல் பயிர் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. பசி மற்றும் அரிசி பற்றிய நிறையக் கதைகளைப் படித்தார். பனிக்கட்டி வாளி அறைகூவல் பிரபலத்தால் ஈர்க்கப்பட்டு மஞ்சு இதற்கு ஒரு மனித தொடுதலைக் கொடுக்க விரும்பினார். இதன் அடிப்படையில் அரிசி வாளி அறைகூவலைத் தொடங்கினார்.[5] இந்நிகழ்ச்சி பலரை ஈர்த்தது. சாலைகளில் இட்லி/தோசை (இந்தியக் காலை உணவில் சிற்றுண்டி) விற்று தினசரி சம்பாத்தியம் மூலம் தமது குடும்ப வாழ்க்கையினை மேற்கொள்ளும் ஏழைகளுக்கு அரிசி நிறைந்த ஒரு வாளியை மிதிவண்டியில் சென்று நன்கொடையாக வழங்குவது இந்நிகழ்வாகும். இந்நிகழ்வின் புகைப்படத்தைத் தனது முகநூலில் பதிவிட்டு தன்னுடைய நண்பர்கள் சிலரை இதனைத் தொடர அறைக்கூவல் விடுத்தார். இந்தியாவின் பல பகுதிகளிலும், உலகிலும் அரிசி பிரதான உணவாக இருப்பதால் இவர் இதைத் தேர்ந்தெடுத்தார். இது பல மில்லியன் கணக்கான பசியுள்ள வயிற்றின் பசியைத் தணிக்கும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களும்[6] வெளிநாடுகளில் உள்ள இந்தியரும் இந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டு தீவிரமாகப் பங்கேற்றார்.[7] இதில். நிறைய பெருநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்[8] மேலும் தனிநபர்கள் பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கேற்று தாராளமாக அரிசியினை நன்கொடையாக அளித்தனர்.[9]
விருதுகள்
தொகுஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு சாரா நிறுவனம் (iCONGOs)[10] லதாவிற்கு கர்மவீர் சக்ரா விருது மற்றும் ரெக்ஸ் கர்மவீர் உலக நிதியுதவியினை வழங்கியது.[10]
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் போது இவரது தன்னார்வச் சேவைக்காகக் காமன்வெல்த் புள்ளிகள் ஆப் லைட் விருது வழங்கப்பட்டது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bucketfuls of nourishment for the needy".
- ↑ "The Rice Bucket Challenge, a New Made-in-India Charity Chain".
- ↑ "Indians switch ice for rice in new charity challenge". CNBC. 26 August 2014.
- ↑ "The story behind India's rice bucket challenge". 25 August 2014.
- ↑ "Rice bucket challenge: Hyderabad's desi rival to the ALS ice bucket challenge". 25 August 2014.
- ↑ "Rice bucket challenge for Onam at capital city". https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2016/sep/06/rice-bucket-challenge-for-onam-at-capital-city-1516467.html.
- ↑ "India's ice bucket challenge: Manju Latha Kalanidhi's idea of giving rice to the needy goes viral". http://economictimes.indiatimes.com/magazines/panache/Indias-ice-bucket-challenge-Manju-Latha-Kalanidhis-idea-of-giving-rice-to-the-needy-goes-viral/articleshow/41166318.cms.
- ↑ "Students rise for the 'Rice Challenge'!". 28 August 2014.
- ↑ "In India, rice replaces ice in bucket challenge". 30 August 2014.
- ↑ 10.0 10.1 Reddem, Appaji (2 September 2014). "Rice bucket challenge pioneer gets U.N. Award". The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/rice-bucket-challenge-pioneer-gets-un-award/article6370306.ece.
- ↑ "Britain Queen Elizabeth II honours for Hyderabad journalist for feeding needy amid COVID-19 crisis". The New Indian Express.