மட் ஹார்டி

அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர்

மத்தேயு மூர் ஹார்டி [1] (Matthew Moore Hardy பிறப்பு: செப்டம்பர் 23, 1974) [2] ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் உடன் ஒப்பந்தம் செய்து மல்யுத்தம் செய்து வருகிறார், அங்கு இவர் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் தனது உடன் பிறந்த சகோதரர் ஜெஃப் உடன் இணைந்து செயல்படுகிறார், அங்கு இவர்கள் கூட்டாக தி ஹார்டி பாய்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள் . மூன்று தனித்தனி தசாப்தங்களில் மல்யுத்தம் செய்த ஹார்டி, பல்வேறு விதமான பாங்குகள் , தன்மை மாற்றங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தனது புகழை தக்க வைத்துக் கொண்டார். 2002 ஆம் ஆண்டில், ஹார்டி உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் தனி நபராக மல்யுத்தப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் மல்யுத்தப் போட்டிகளில் பங்குபெறத் துவங்கியது முதல் பல விருதுகளை பெற்றார். இதில் இரண்டாவது சிறந்த ஜிம்மிக் விருது குறிப்பிடத்தக்கது ஆகும்.

உலக மல்யுத்த சங்கத்தின் இணை வாகையாளர் பட்டத்திற்காக நடைபெற்ற மேஜைகள் , ஏணிகள் மற்றும் நாற்காலிகள் போட்டிகளில் ஹார்டிஸ் சகோதரர்கள் பங்கேற்றதன் மூலமாக இவர்கள் பரவலாக அறியப்பட்டனர்.[3] மல்யுத்த வீரராக, இவர் 14 முறை உலக இணை வாகையாளர் பட்டத்தினை வென்றுள்ளார் ஆறு முறை டபிள்யு டபிள்யு எஃப் / உலக இணை வாகையாளர் பட்டம் , மூன்று முறை டபிள்யு டபிள்யு இ / ரா இணை வாகையாளர் வாகையாளர் பட்டம் , ஒரு முறை ஸ்மாக்டவுன் இணை வாகையாளர் வாகையாளர் பட்டம் , ஒரு ரோஹ் வேர்ல்ட் இணை வாகையாளர் வாகையாளர் பட்டம் , ஒரு டபிள்யூ.சி.டபிள்யூ இணை வாகையாளர் பட்டம் மற்றும் இரண்டு டி.என்.ஏ உலக இணை வாகையாளர் பட்டம் போன்ற பட்டங்களை தனது சகோதரருடன் இணைந்து பெற்ருள்ளார் .[4] ஒற்றையர் மல்யுத்த வீரராக, ஹார்டி மூன்று முறை உலக வாகையாளர் பட்டம் வென்றுள்ளார். இரண்டு முறை டி.என்.ஏ உலக மிகுகன வாகையாளர் பட்டம் மற்றும் ஒரு ஈ.சி.டபிள்யூ வாகையாளர் பட்டத்தினை வென்றார் .

ஹார்டி தொழில்முறை மல்யுத்த வீரர் ரெபேக்கா "ரெபி ஸ்கை" ரெய்ஸை மணந்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மேக்சல் 2015 இல் பிறந்தார் மற்றும் வொல்ப்காங் க்ஸாண்டர் 2017 இல் பிறந்தார். ஹார்டியும் அவரது குடும்பத்தினரும் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் முன்னிலை வகிக்கின்றனர். ஹார்டி 2013 புரோ மல்யுத்த வீரர்கள் Vs ஜோம்பிஸ் திரைப்படத்தில் நடிகராகவே திரையில் தோன்றினார்.மற்றும் மல்யுத்தத்திற்கு வெளியே பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். " ட்விஸ்ட் ஆஃப் ஃபேட்: தி மாட் மற்றும் ஜெஃப் ஹார்டி ஸ்டோரி " என்ற ப்ளூ-ரே தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார், மேலும் அவரது சகோதரருடன் " தி ஹார்டி பாய்ஸ்: எக்சிஸ்ட் 2 இன்ஸ்பயர் " போன்ற சுயசரிதைகளைதனது சகோதரருடன் இணைந்து எழுதியுள்ளார்.

தி ஹார்டி பாய்ஸ் (1998-2001) தொகு

ஹார்டி சகோதரர்களுக்கு உலக மல்யுத்த சங்கத்தில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு முன்னாள் மல்யுத்த வீரர் டோரி ஃபங்க், ஜூனியர் அகியோரிடன் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.[1] இதனை ஹார்டி பாய்ஸ் சிறப்பாக பயன்படுத்தினர். இருவரும் மைக்கேல் ஹேஸை என்பவரை மேலாளராக தேர்ந்தெடுத்தனர்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Matt Hardy". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் October 8, 2007.
  2. "Matt Hardy Bio". Pro Wrestling Direct. Archived from the original on July 13, 2007. பார்க்கப்பட்ட நாள் September 1, 2007.
  3. "SummerSlam 2000". World Wrestling Entertainment. Archived from the original on June 21, 2007. பார்க்கப்பட்ட நாள் September 26, 2008.
  4. "WWE Alumni Bio". World Wrestling Entertainment. பார்க்கப்பட்ட நாள் October 20, 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்_ஹார்டி&oldid=3285237" இலிருந்து மீள்விக்கப்பட்டது