மணமகள் கடத்தல்

மணமகள் கடத்தல் (Bride kidnapping) என்றழைக்கப்படும் நிகழ்வானது மணப்பெண்ணைக் கடத்திச் செல்லுதல் அல்லது மணப்பெண்ணால் விரும்பப்படும் ஆண்மகனால் அப்பெண் கடத்திச் செல்லப்பட்டு திருமணம் செய்யப்படுதல் என்ற ஒரு பழக்கத்தையும் குறிக்கும் தொடராகும்.[1] மணமகள் கடத்தல் உலகம் முழுவதும், வரலாறு முழுவதும் நடைமுறையில் காணப்படுகிறது. மத்திய ஆசியாவில் உள்ள நாடுகள், காக்கேசியா பகுதி மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் மொங் இன மக்கள், மெக்சிகோவில் செல்டால் இன மக்கள் மற்றும் ஐரோப்பாவில் ரோமா இன மக்கள் போன்ற பலதரப்பட்ட மக்களிடம் இந்த வழக்கம் இன்னும் காணப்படுகின்றது.

குதிரைளில் வரும் நான்கு ஆண்கள் ஒரு பெண்ணைக் (வலமிருந்து முதலில் உள்ளவர்) கடத்த தயாராகிறார்கள். கிர்கிஸ் புல்வெளி, 1871 மற்றும் 1872 க்கு இடைப்பட்ட காலம்

பெரும்பாலான நாடுகளில், மணமகள் கடத்தல் என்பது திருமணத்தின் சரியான வடிவம் என்பதை விட பாலியல் குற்றமாகவே கருதப்படுகிறது. இந்த நடைமுறை சட்டத்திற்கு எதிரானதாக இருந்தாலும் கூட, சில பகுதிகளில் நீதித்துறை அமலாக்கம் தளர்வாகவே உள்ளது. மணமகள் கடத்தல் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்கிறது, ஆனால் இது காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் மிகவும் பொதுவானது.[2] மணமகள் கடத்தல் என்பது பெரும்பாலும் (ஆனால் எப்போதும் இல்லை) குழந்தைத் திருமணத்தின் ஒரு வடிவமாகவும் உள்ளது.[3] இது மணமகளுக்கான விலை கொடுக்கும் நடைமுறையுடன் இணைக்கப்பட்டு, அதை செலுத்த இயலாமை அல்லது விருப்பமின்மை காரணமாகவும் நிகழலாம். [4]

மணமகள் கடத்தல் என்பது ஓர் ஆணால் (மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களால்) ஒரு பெண் கடத்தப்படுவதைக் குறிக்கிறது. அதேசமயம் ஆண்களின் குழுக்களால், பெரும்பாலும் போர்க்காலங்களில், பெண்கள் பெரிய அளவில் கடத்திச் செல்லப்படுவதும் பரவலான நடைமுறையாக இருந்துள்ளது.

சில கலாச்சாரங்கள் இன்று திருமணத்தைச் சுற்றியுள்ள மரபுகளின் ஒரு பகுதியாக அடையாள மணமகள் கடத்தல் சடங்கைப் பராமரித்து வருகின்றன. இந்தச் சடங்கு மணமகள் கடத்தல் நடைமுறைக்கு ஆதரவான மனநிலையையே வெளிப்படுத்துகிறது. சில ஆதாரங்களின்படி, தேனிலவு என்பது மணப்பென் கைப்பற்றுவதன் மூலம் நடந்த திருமணத்தின் ஒரு நினைவுச்சின்னமாகும். கணவர் தனது உறவினர்களிடமிருந்து பழிவாங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மனைவியுடன் தலைமறைவாகி, திருமணம் நடந்த மாத இறுதிக்குள் பெண் கர்ப்பமாக இருப்பார் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாகவே இது கருதப்படுகிறது.[5]

பின்னணியும், பகுத்தறிவும் தொகு

மணமகள் கடத்தலுக்குப் பின்னால் உள்ள உந்துதல்கள் பிராந்தியங்களின் அடிப்படையில் வேறுபடுகின்றன என்றாலும், கடத்தல் மூலம் திருமண மரபுகளைக் கொண்ட கலாச்சாரங்கள் பொதுவாக ஆணாதிக்க கலாச்சாரங்களாகவே இருந்திருக்கின்றன. முறையான திருமணமற்ற பாலியல் உறவு அல்லது கர்ப்பம் மற்றும் சட்டவிரோத பிறப்புகளுக்கு வழிவகுக்கும் வலுவான சமூகக் களங்கமாகவே இது உள்ளது. [6] சில தற்கால நிகழ்வுகளில், மணமகள் கடத்தல் என்ற போர்வையில் தம்பதியினர் ஒன்றிணைந்து, தங்கள் பெற்றோரை ஒரு இயலாமற் போன நிலைக்குத் தள்ளுகின்றனர். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு மனைவியைக் கைப்பற்ற விரும்பும் ஆண்கள் பெரும்பாலும் வறுமை, நோய், மோசமான தன்மை அல்லது குற்றவியல் பின்னணி காரணமாக குறைவான சமூக மதிப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெண்ணின் குடும்பத்தினர் எதிர்பார்க்கும் பணம், மணமகளின் விலை (பெண்ணின் குடும்பத்தினரால் செலுத்தப்படும் வரதட்சணையுடன் குழப்பமேற்படுத்திக் கொள்ளக்கூடாது.) ஆகியவற்றின் காரணமாக அவர்கள் சில சமயங்களில் சட்டபூர்வமாக மனைவியை அடைவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. "Captured Hearts". www.nationalgeographic.org. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
  2. "Police swoop on fake 'bride kidnapping'" (in en-GB). 2 September 2016. https://www.bbc.com/news/blogs-news-from-elsewhere-37256574. 
  3. "One in five girls and women kidnapped for marriage in Kyrgyzstan:..." (in en). 1 August 2017. https://www.reuters.com/article/us-kyrgyzstan-women-bride-kidnapping-idUSKBN1AH5GI. 
  4. "Abduction, Often Violent, a Kyrgyz Wedding Rite" (in en-US). 30 April 2005. https://www.nytimes.com/2005/04/30/world/asia/abduction-often-violent-a-kyrgyz-wedding-rite.html. 
  5. See, e.g., William Shepard Walsh, Curiosities of Popular Customs and of Rites, Ceremonies, Observances, and Miscellaneous Antiquities, (J.B. Lippincott Co., 1897), p. 654; John Lubbock, The Origin of Civilisation and the Primitive Condition of Man: Mental and Social Condition of Savages, (Appleton, 1882), p. 122. Curtis Pesmen & Setiawan Djody, Your First Year of Marriage (Simon and Schuster, 1995) p. 37. Compare with Edward Westermarck, The History of Human Marriage (Allerton Book Co., 1922), p. 277 (refuting the link between honeymoon and marriage by capture).
  6. See Brian Stross, "Tzeltal Marriage by Capture", Anthropological Quarterly, Vol. 47, No. 3, Kidnapping and Elopement as Alternative Systems of Marriage (Special Issue) (Jul. 1974), pp. 328–346 (describing Tzeltal culture as patriarchal with a few opportunities for "pre-marital cross-sex interaction")[hereinafter Stross, Tzeltal Marriage by Capture]; Sabina Kiryashova, "Azeri Bride Kidnappers Risk Heavy Sentences", Institute of War and Peace Reporting, 17 November 2005 (discussing the shame brought on Azeri kidnap victims who spend a night outside of the house); Gulo Kokhodze & Tamuna Uchidze, "Bride Theft Rampant in Southern Georgia", (discussing the Georgian case, where "great social stigma attaches to the suspicion of lost virginity."). Compare with Ayres, Barbara (1974). "Bride Theft and Raiding for Wives in Cross-Cultural Perspective". Anthropological Quarterly 47 (3): 238–252. doi:10.2307/3316978. https://archive.org/details/sim_anthropological-quarterly_1974-07_47_3/page/238. "There is no relationship between bride theft and status distinctions, bride price, or attitudes toward premarital virginity. The absence of strong associations in these areas suggests the need for a new hypothesis.". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகள்_கடத்தல்&oldid=3520485" இலிருந்து மீள்விக்கப்பட்டது