உமாங்கு மக்கள்
உமாங்கு (Hmong) மக்கள் எனப்படுவோர் பெரும்பாலும் தெற்கு சீனா (குயிசூ, யுன்னான், சிச்சுவான், சோங்கிங், குவாங்சி), வியட்நாம், இலாவோசு, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆசிய இன மக்கள் ஆவர். இவர்கள் 2007 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு (UNPO) என்ற அமைப்பின் பிரதிநிதிகளாக உள்ளனர்.[8] சீனாவில் இவர்கள் மியாவோ மக்களின் ஒரு உப குழுவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வியட்நாம் சந்தை ஒன்றில் உமாங்கு பெண்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
11 முதல் 12 மில்.[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சீனா | 9,426,007(2010) |
வியட்நாம் | 1,393,547(2019)[2] |
லாவோஸ் | 595,028 (2015)[3] |
ஐக்கிய அமெரிக்கா | 327,000 (2019)[4] |
தாய்லாந்து | 250,070 (2015) |
மியான்மர் | 40,000 |
ஆத்திரேலியா | 3,438 (2011)[5] |
பிரான்சு (பிரெஞ்சு கயானா) | 2,000[6] |
கனடா | 805 (1979)[7] |
மொழி(கள்) | |
உமாங்கு மொழி, சீனம், தாய், வியட்நாமியம், இலாவோசு, பிரான்சியம், ஆங்கிலம், பருமியம் | |
சமயங்கள் | |
ஷாமன் மதம் • கிறிஸ்தவம் • பௌத்தம் |
1950களில் முதலாம் இந்தோசீனப் போர், 1970களில் வியட்நாம் போர்களின் போது, வடக்கு, தெற்கு வியட்நாம் மற்றும் கம்யூனிச பதெட் லாவோ படையினருக்கு எதிராகப் போரிடுவதற்காக பிரான்சும் ஐக்கிய அமெரிக்காவும் பல்லாயிரக்கணக்கான உமாங்கு மக்களைத் தமது படைகளில் சேர்த்துக் கொண்டனர். நடுவண் ஒற்று முகமையின் இந்த நடவடிக்கை இரகசியப் போர் என அழைக்கப்பட்டது.[9] 1975 ஆம் ஆண்டில் பதெட் லாவோ படைகள் இலாவோசு நாட்டைக் கைப்பற்றியதை அடுத்து வஞ்சம் தீர்ப்பதற்காக உமாங்கு இனத்தவர்கள் ஏனைய லாவோ மக்களிடம் இருந்து வேறுபடுத்தப்பட்டார்கள். இதனை அடுத்து அவர்கள் பல்லாயிரக்கணக்கில் அரசியல் தஞ்சம் கோரி தாய்லாந்து சென்றார்கள். 1970களின் பிற்பகுதியில் இவர்களில் பெரும்பான்மையானோர் மேலை நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரெஞ்சு கினி, கனடா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். மீதமிருந்தோரில் பலர் ஐநாவின் உதவித்திட்டத்துடன் லாவோசிற்குத் திரும்பினார்கள். கிட்டத்தட்ட 8,000 உமாங்கு மக்கள் இன்னமும் அகதிகளாக தாய்லாந்தில் தங்கியிருக்கிறார்கள்.[10]
ஊடகக் காட்சியகம்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Lemoine, Jacques (2005). "What is the actual number of (H)mong in the world?". Hmong Studies Journal 6. http://www.hmongstudies.org/LemoineHSJ6.pdf. பார்த்த நாள்: 2009-03-01.
- ↑ "Report on Results of the 2019 Census". General Statistics Office of Vietnam. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
- ↑ "Results of Population and Housing Census 2015" (PDF). Lao Statistics Bureau. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
- ↑ "U.S. Census website". ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2012-06-07.
- ↑ "ABS Census – ethnicity". பார்க்கப்பட்ட நாள் 2012-06-07.
- ↑ "Hmong's new lives in Caribbean". 2004-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-03-11.
- ↑ Canada. "Census Profile, 2016 Census".
- ↑ "UNPO: Hmong". unpo.org. 17 July 2017. பார்க்கப்பட்ட நாள் 24 January 2019.
- ↑ Hamilton-Merritt, Jane. Tragic Mountains.
- ↑ Borders, Doctors without (2008), Thailand Forcibly Returns Hundreds of Hmong Refugees to Laos, archived from the original on 2008-10-28, பார்க்கப்பட்ட நாள் 2009-12-28
வெளி இணைப்புகள்
தொகு- HmongNet.org பரணிடப்பட்டது 2012-04-17 at the வந்தவழி இயந்திரம், list of Hmong-related web sites edited by Mark Pfeifer of the Hmong Cultural Center.
- Hmong Studies Internet Resource Center பரணிடப்பட்டது 2013-05-18 at the வந்தவழி இயந்திரம், including multimedia educational content பரணிடப்பட்டது 2012-03-19 at the வந்தவழி இயந்திரம் about Hmong culture.
- GaryYiaLee.com, articles on Hmong history and culture by Hmong Australian anthropologist, Dr. Gary Yia Lee
- Hmong Contemporary Issues, articles on Hmong culture, history, and other topics by Hmong French Anthropologist & Linguist, Dr. Kao-Ly Yang (English, French, and Hmong languages).
- Hmong History Timeline[தொடர்பிழந்த இணைப்பு]