குயிசூ (எளிய சீனம்: பின்யின்: About this soundGuìzhōu Guizhou) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள மாகாணங்களுள் ஒன்று. அதன் மாகாணத் தலைநகரம் குய்யங் ஆகும்.

குயிசூ மாகாணம்
贵州省
மாகாணம்
பெயர் transcription(s)
 • சீனம்贵州省 (Guìzhōu Shěng)
 • சுருக்கம் or (pinyin: சியான் அல்லது குய்)
Map showing the location of குயிசூ மாகாணம்
சீனாவில் அமைவிடம்: குயிசூ மாகாணம்
பெயர்ச்சூட்டுGui - குய் மலைகள்
zhou (மாவட்டம்)
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
குய்யாங்
பிரிவுகள்9 அரச தலைவர், 88 கவுண்டி மட்டம், 1539 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்சென் மின்'இர்
 • ஆளுநர்சன் சிகாங்
பரப்பளவு[1]
 • மொத்தம்1,76,167 km2 (68,018 sq mi)
பரப்பளவு தரவரிசை16 வது
மக்கள்தொகை (2010)[2]
 • மொத்தம்3,47,46,468
 • தரவரிசை19 வது
 • அடர்த்தி200/km2 (510/sq mi)
 • அடர்த்தி தரவரிசை18 வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான் - 62%
மியாவோ - 12%
புயீ - 8%
தொங் - 5%
துஜியா - 4%
யி - 2%
இனம் குறிப்பிடாதோர் - 2%
குலாவோ - 2%
சுய் - 1%
 • மொழிகளும் கிளைமொழிகளும்தென்மேற்கு மாண்டரின்
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-52
GDP (2014)CNY 925,10 பில்லியன்
US$ 150.599 பில்லியன் (26 வது)
 • per capitaCNY 26,393
US$ 4,297 (31 வது)
HDI (2010)0.598[3] ( நடுத்தரம்) (30th)
இணையதளம்http://www.gzgov.gov.cn
(எளிய சீனம்)
குயிசூ
நவீன சீனம்
பண்டைய சீனம்
PostalKweichow

பெயர் தொகு

இந்த பகுதி முதல் முதலில் தாங் அரசமரபு காலத்தில் சீரமைக்கப்பட்டு சீனப்பேரரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஆட்சிப்பகுதியாக ஆக்கப்பட்டு "ஜுயிசூ" (矩州, பழஞ்சீனம்: Kjú-jyuw) எனப் பெயரிடப்பட்டது. மங்கோலியத் தலைமையிலான யுவான் அரசமரபு காலத்தில் தச்சுமூலைமட்டம் எனப்பொருள்படும் "ஜு" என்ற முதல் சொல்லின் மாற்றாக விலைமதிப்பற்ற எனப்பொருள்படும் "குய்" (Gui) என்று மாற்றப்பட்டது. [4]

வரலாறு தொகு

கி.மு. 1046 காலகட்டத்தில் சீனாவின் சின் மரபின் ஆட்சிக்காலத்தில், வடமேற்கு குயிசூ, ஷூ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.[5] போரிடும் நாடுகள் காலத்தில் சீனாவின் சூ அரசு இப்பகுதியை வெற்றிகொண்டது, பின்னர் இப்பகுதி தியான் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது .

நிலவியல் தொகு

குயிசூவின் எல்லைகளாக வடக்கில் சிச்சுவான் மாகாணமும் சோங்கிங் நகராட்சியும், மேற்கே யுன்னான் மாகாணமும், தெற்கில் குவாங்சி மாகாணமும், கிழக்கே ஹுனான் மாகாணமும் உள்ளன. குயிசூ மாகாணத்தின் மேற்கு பகுதி மலைகள் நிறைந்து காணப்படுகின்றது. ஒட்டுமொத்த குயிசூவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஒப்பீட்டளவில் சமவெளியாக இருக்கின்றன. மாகாணத்தில் மேற்கு பகுதி யுன்னான்-குய்சூ உயர்நிலத்தின் ஒருபகுதியாக உள்ளது. மாகாணத்தின் குறிப்பித்தக்க நகரங்கள்: அன்சூன், கைலி, சுன்யீ, தௌயுயென், லியூபன்சுயெ, குயிங்சென் ஆகும்.

குயிசூ மாகாணம் துணை வெப்பமண்டல ஈரப்பதமான காலநிலை கொண்டதாக உள்ளது. எனினும் சில பருவகால மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் ஆண்டுச் சராசரி வெப்பநிலை சுமார் 10 முதல் 20 °செல்சியஸ், சனவரி மாத சராசரி வெப்பநிலை 1 ல் இருந்து 10 °செல்சியஸ் ஆகவும், சூலை மாத சராசரி வெப்பநிலை 17 முதல் 28 °செல்சியஸ் வரையும் நிலவும். இம்மாகாணம் பாலைநிலமாதல், தொடர்ந்த நீர் பற்றாக்குறை போன்ற தீவிரமான சுற்றுச்சூழல் இடர்பாடுகளால் இன்னலுற்று வருகின்றது.

சீனாவின் மற்ற தென்மேற்கு மாகாணங்களைப் போலவே குயிசூ மாகாணத்தின் நாட்டுப்புறப்பகுதிகள் 2010 ஆண்டின் வசந்த காலத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 2010 3-5 ஆகிய மூன்று நாட்கள் சீனாவின் பிரதமர் வென் ஜியாபா இன்னலுற்ற குயிசூவின் தென்மேற்குப் பகுதிகளில் உள்ள நாட்டுப்புறப்பகுதிகளுக்குச் சென்று, அப்பகுதியில் வறட்சி எதிர்ப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேளாண்விஞ்ஞானிகளைப் பணித்தார்.[6]

பொருளாதாரம் தொகு

குயிசூ நடைமுறையில் வறிய மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையாத ஆனால் இயற்கை, பண்பாடு மற்றும் சுற்றுச்சூழல் வளம் நிறைந்த மாகாணமாகும். இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012 இல் 680.22 பில்லியன் யுவான் (107.758 பில்லியன் அமெரிக்க டாலர்). 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, குயிசூ பகுதியிலிருந்து பாதரசம் , தங்கம், இரும்பு, ஈயம், புகையிலை, நறுமணப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தன.[7]

குயிசூ புகையிலைக்குச் சீனாவில் புகழ் பெற்றது. புகையிலை உற்பத்தியில் சீனாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.[8] மாகாணத்தில் உள்ள மற்ற முக்கிய தொழிற்துறைகள் மின்சார உற்பத்தியும் சுரங்கத்தொழில்களும் ஆகும். சுரங்கத்தொழில்களில் குறிப்பாக நிலக்கரி, சுண்ணாம்புக் கல், ஆர்சனிக், ஜிப்சம், களிப்பாறை எண்ணெய் ஆகியவை உள்ளன. உற்பத்தியின் பெரும்பகுதியை குவாங்டாங் மற்றும் பிற மாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. [8] குயிசூ மாகாணத்தில் மொத்த நிலக்கரி உற்பத்தி 2008 இல் 118 மில்லியன் டன்களாகும். இது முந்தைய ஆண்டைவிட 7% கூடுதல் ஆகும். [9]

சமயம் தொகு

இந்த மாகாணத்தில் சீன நாட்டுப்புறச்சமயங்கள், தாவோயிச மரபுகள் மற்றும் சீனபுத்தம் ஆகியவை குறிப்பிடும்படியாக உள்ளன. 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகளின் படி, மக்கள் தொகையில் 31.18% முன்னோர்களின் சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் குறைந்த அளவிளான முஸ்லீம்கள் உள்ளனர். முன்பு 1.13% என்ற எண்ணிக்கையில் இருந்த கிருத்தவர்கள் 2004 ஆண்டு கணக்கெடுப்பில் 0.99% என்ற எண்ணிக்கையில் குறைந்துவிட்டனர். [10] இந்த அறிக்கைகளில் பிற சமயங்களைப் பற்றிய விவரங்கள் இல்லை. மக்கள் தொகையில் 67.83% சமயப் பற்றற்றவர்களாகவோ அல்லது இயற்கையை வழிபடுவோர்களாகவோ, கன்பூசிய மதம், தாவோ, நாட்டுப்புறச்சமயத்தினராகவோ உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Doing Business in China - Survey". Ministry Of Commerce - People's Republic Of China. http://english.mofcom.gov.cn/article/zt_business/lanmub/. பார்த்த நாள்: 5 August 2013. 
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1 (No. 2)"]. National Bureau of Statistics of China. 29 April 2011. http://www.stats.gov.cn/english/newsandcomingevents/t20110429_402722516.htm. பார்த்த நாள்: 4 August 2013. 
  3. "《2013中国人类发展报告》" (in zh) (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் China. 2013. http://www.cn.undp.org/content/dam/china/docs/Publications/UNDP-CH-HD-Publication-NHDR_2013_EN_final.pdf. பார்த்த நாள்: 2014-05-14. 
  4. Wilkinson, Endymion (2012). Chinese History: A New Manual. Harvard-Yenching Institute Monograph Series 84. Cambridge, MA: Harvard-Yenching Institute; Harvard University Asia Center. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-06715-8. 
  5. Maygew, Bradley; Miller, Korina; English, Alex (2002). "Facts about South-West China - History". South-West China (2 ). Lonely Planet. பக். 16–20, 24. 
  6. "China's premier concerned about drought in SW China". Xinhua. 2010-04-05. http://news.xinhuanet.com/english2010/china/2010-04/05/c_13238009.htm. பார்த்த நாள்: 2008-09-17. 
  7. Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. பக். 123. http://www.wdl.org/en/item/7317/view/1/123/. 
  8. 8.0 8.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://thechinaperspective.com/topics/province/guizhou-province/. 
  9. "Coal output in SW China province tops 100 mln tons". People's Daily Online. 2005-12-24. http://english.people.com.cn/200512/24/eng20051224_230502.html. பார்த்த நாள்: 2008-07-06. 
  10. China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: Xiuhua Wang (2015, p. 15)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயிசூ&oldid=3550580" இருந்து மீள்விக்கப்பட்டது