மணற்கொள்ளை
மணற்கொள்ளை அல்லது மணல் திருட்டு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது. இது ஜமைக்கா[1], இந்தியா போன்ற நாடுகளில் ஆற்றங்கரையிலும் கடல் கரையிலும் உள்ள மணலை சட்டத்திற்கு புறம்பாக திருடும் செயலாகும்.
கொள்ளையடிக்கப்படும் மணல் வகைகள்
தொகு- கடல் மண்
- ஆற்று மண்
ஏற்படும் விளைவுகள்
தொகு- கடல் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்விடங்களில் கட்டுப்பாடற்ற மணல் எடுக்க இருந்து சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன[2]
- பல தீவுகள் இல்லாமலே போய் விட்டன[2]
- நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினையும், உழவுத் தொழில் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது.
- கடலோரங்களில் மணல் அள்ளப்படுவதால் கடல்நீர் உள்ளே புகுந்து மீனவர் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவதும் நடைபெறுகிறது.
- கடற்கரையில் மணல் அகழ்வினால் வெப்ப மண்டல சூறாவளிகளும் சுனாமியுடன் தொடர்புடைய அலைகளும் புயலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாதுகாப்பு அற்ற நிலையை ஏற்படுத்துகின்றன.[3]
இந்தியாவில் மணற்கொள்ளை
தொகுசட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளுதல் மற்றும் திருடுதலை இந்திய குற்றப்பபிரிவின் கீழும் பதிவு செய்யலாம்.[4]
இந்தியாவில் உள்ள சட்டங்கள்
தொகுதமிழகத்தில் மணற்கொள்ளை
தொகுதமிழகத்தில் மணற்கொள்ளையில் ஈடுபடும் கும்பல்களுக்கு அரசியல் ஆதரவு இருப்பதாகப் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதனைத் தடுக்க முயலும் நேர்மையான அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதும் உண்டு.[5]
தாது மணற்கொள்ளை
தொகுகனிம வளம் கொண்ட பகுதியில் உள்ள மணலை அதிகமாக அள்ளுவது தாது மணற்கொள்ளை என அறியப்படுகின்றது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரத் தேரிப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த வகை மணற்கொள்ளை நடந்து பிரச்சனைக்குள்ளானது. தாது வளம் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி), ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றது.[6]
2008-09 முதல் 2010-11 வரை தோண்டிப்பிரித்தெடுத்த கனிமங்களின் மொத்த அளவு[7]
கனிமங்கள் | ஒரு டன்னின் விலை (ரூபாயில்) | இந்தியா (டன்களில்) | பணமதிப்பு(கோடிகளில்) | தமிழ்நாடு (டன்களில்) | பணமதிப்பு(கோடிகளில்) |
---|---|---|---|---|---|
கார்னெட் | 5000 | 4790124 | 2395.062 | 4397359 | 2198.6795 |
இல்மனைட் | 5000 | 1964949 | 982.4745 | 1050500 | 525.25 |
ரூட்டைல் | 45000 | 64264 | 289.188 | 21434 | 96.453 |
ஜிர்கான் | 40000 | 90416 | 361.664 | 57553 | 230.212 |
மொத்தம் | 185000 | 6909753 | 4028.3885 | 5526846 | 3050.594 |
நீதி மன்ற தலையீடு
தொகுதமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் முறைகேட்டையும், கனிம மணல் கொள்ளையையும் குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயம் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.[8] இக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[9]
ஆற்று மணல் எடுக்கப்படும் இடங்கள்
தொகுஅரசால் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://news.bbc.co.uk/2/hi/americas/7678379.stm
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-09-13.
- ↑ http://coastalcare.org/sections/inform/sand-mining/
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/sand-smugglers-can-be-booked-under-ipc-as-well-as-mining-act/article2779388.ece
- ↑ http://www.vinavu.com/2010/11/13/illegal-sand-mining-in-tamilnadu/
- ↑ http://tamil.thehindu.com/tamilnadu/கிராமங்களை-அழிக்கும்-துணிகர-கனிமக்-கொள்ளை/article5145013.ece
- ↑ க.கனகராஜ் (13 நவம்பர் 2013). "தறிகெட்டு நடக்கும் தாது மணல் கொள்ளை!". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140911_sahayam.shtml
- ↑ "கிரானைட் - கனிம மணல் கொள்ளை விவகாரம் தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 19 செப்டம்பர் 2014. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/river-sand-quarrying-resumes/article5390738.ece