மணாலி தக்சினி

இந்திய துடுப்பாட்ட வீராங்கனை

மணாலி கிசோர் தக்சினி (Manali Dakshini) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளராகவும் வலது கை மட்டையாளராகவும் இவர் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.[1] [2] ர் மும்பை மற்றும் மேற்கு மண்டல அணிகளுக்காக மணாலி தக்சினி துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார். 3 முதல்தரப் போட்டிகள், 11 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் மற்றும் 21 மகளிர் இருபது20 போட்டிகள் என இவர் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.. [3] [4] [5] ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 2018–19 மூத்த மகளிர் போட்டி கோப்பைக்கான இந்தியா புளூ அணியில் இடம் பெற்றார். [6] 2019 சனவரியில் நடைபெற்ற இப்போட்டியில் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார். 2020 மகளிர் டி20 சவாலுக்கான வெலாசிட்டி அணியில் மணாலி தக்சினி தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]

மணாலி தக்சினி
Manali Dakshini
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மணாலி கிசோர் தக்சினி
பிறப்பு29 செப்டம்பர் 1997 (1997-09-29) (அகவை 26)
தானே, மகாராட்டிரம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–முதல்மும்பை பெண்கள் துடுப்பாட்ட அணி
2020ஐ.பி.எல் வெலாசிட்டி
மூலம்: ESPNcricinfo, 8 சனவரி 2020

மேற்கோள்கள் தொகு

  1. "Manali Dakshini". பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  2. "Manali Dakshini". பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  3. "Womens_two_innings_Matches".
  4. "Womens_limited_overs_Matches".
  5. "Womens_Twenty20_Matches".
  6. "Pandey, Raut and Meshram to lead in Challenger Trophy". 21 December 2018. https://www.cricbuzz.com/cricket-news/105746/shikha-pandey-punam-raut-and-mona-meshram-to-lead-in-womens-challenger-trophy-2018-19. 
  7. "Sophie Ecclestone, Deandra Dottin, Chamari Atapattu among overseas stars at Women's T20 Challenge". பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணாலி_தக்சினி&oldid=3919180" இலிருந்து மீள்விக்கப்பட்டது