மணிகண்டேசுவரம் உமா மகேசுவரர் கோயில்
மணிகண்டேசுவரம் உமா மகேசுவரர் கோயில் இந்தியாவின் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வடக்கேகாடு என்னுமிடத்தில் உள்ள சிவன் மற்றும் பார்வதி கோயிலாகும். இது ஒரு இந்து கோயில் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலானது என்று கருதப்படுகின்ற இக்கோயில் இந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் குருவாயூர் கோயிலுக்கு அருகில் உள்ளது. [1]
கோயில் அமைப்பு
தொகுஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இக்கோயிலில் நடுத்தர அளவுடைய கோயில் குளம் உள்ளது. இங்கு பாலக்கல் பகவதி (துர்க்கையின் வடிவம்), ஐயப்பன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. பாலக்கால் பகவதி அசுர குணத்தோடும், உமா மகேஸ்வர கோவிலில் தேவ குணத்தோடும் இருப்பதாக கருதப்படுகிறது.
கருவறையைச் சுற்றி ஏராளமான சிற்பங்கள் உள்ளன. அவை கட்டுமானத்தை விட பழமையானவையாகும். இருப்பினும் அதன் காலம் கண்டறியப்படவில்லை.
இக்கோயில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாரவாடுகளின் குல தெய்வம் ஆகும். ஒவ்வொன்றும் மேலும் பல குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பழங்காலத்திலிருந்து நடைமுறையில் உள்ள பல சடங்குகள் இன்னும் இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது.
நிர்வாகம் மற்றும் பூசை விவரங்கள்
தொகுமலபார் தேவஸ்வம் வாரிய நிர்வாகத்தின்கீழ் உள்ள இக்கோயில், நான்கு பேர் கொண்ட அறங்காவலர் குழுவால் நடத்தப்படுகிறது. புலியனூர் இக்கோயிலின் தந்திரி ஆவார். காலை மற்றும் மாலை அமர்வுகள், பல விழாக்கள் இங்கு நடத்தப்பெறுகின்றன. திருமண வாய்ப்புகள், குழந்தைப்பேறு, நோய்களைக் குணப்படுத்துதல் மற்றும் இலக்குகளை அடைதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களின் அடிப்படையில் இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.