மணிக்கூட்டுக் கோபுர சதுக்கம், திம்பு
மணிக்கூட்டுக் கோபுர சதுக்கம் (Clock Tower Square) பூட்டானின் திம்புவில் உள்ள ஒரு சதுக்கமும் நான்கு கடிகார முகங்களைக் கொண்ட புகழ்பெற்ற கோபுரத்தின் தளமும் ஆகும். சதுக்கத்தை சுற்றி பல கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளன.
அமைவிடம்
தொகுதலைநகரின் மையப்பகுதியில் உள்ள தேசிய கால்பந்து அரங்கத்திற்கு மேலே திம்புவின் நார்சின் லாம் கீழே மணிக்கூட்டுக் கோபுர சதுக்கம் அமைந்துள்ளது.
கட்டிடக்கலை
தொகுமணிக்கூட்டுக் கோபுரம் பூட்டானின் சிற்ப வேலைப்பாடுகளுடனும், ஓவியங்களுடனும் ஒரு பொதுவான பூட்டானிய கட்டிடக்கலை கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. கோபுரத்தின் நான்கு முகங்களிலும் தங்க ஓவியம் கொண்ட பாரம்பரியமாக கையால் வடிவமைக்கப்பட்ட டிராகன் உருவம் உள்ளது. இது பூட்டானை ஒரு சுதந்திர டிராகன் இராச்சியமாக அடையாளப்படுத்துகிறது. கோபுரத்தில் அழகிய ஓவியங்களும், மலர்களின் செதுக்கல்களும் உள்ளன. இது கோபுரத்திற்கு அதிக பிரம்மாண்டத்தை சேர்க்கிறது. மணிக்கூட்டுக் கோபுர சதுக்கத்தில் உள்ள கடைகள், உணவகங்கள் , தங்கும் விடுதுகள் பல வண்ண மர முகப்புகள், சிறிய வளைவு சாரளங்கள், சாய்ந்த கூரைகளுடன் சிறந்த பாரம்பரிய மற்றும் நவீன கட்டிடக்கலை பூட்டானிய வடிவமைப்பின் கலவையாகும். சதுக்கத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் அனைத்தும் சிறிய மூன்று மாடி கட்டமைப்புகளாக அமைந்துள்ளது.[1]
மற்ற இடங்கள்
தொகுஇங்கு அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகளும், பாரம்பரிய பூட்டானிய மணி லால்ஹோர்களும் (பிரார்த்தனை சக்கரங்கள்) இந்த இடத்தை திம்புவில் சிறந்த இடமாக அமைகிறது. பிரார்த்தனை சக்கரங்கள் நாடு முழுவதும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. இது பூட்டானிய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறாது. மேலும், அவற்றைத் திருப்புவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.[2] சதுக்கம் பெரும்பாலும் நிதி திரட்டும் நிகழ்வுகள், திரைப்பட விருது வழங்கும் விழா, வர்த்தக கண்காட்சிகள், நேரடி இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கும், செயல்பாடுகளுக்கான தளமாக செயல்படுகிறது. [3] கோபுரத்திற்கு எதிரே ஒரு சிறிய விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு குழந்தைகள் விளையாடலாம். இந்திய-பூட்டான் நட்பு தானுந்து பேரணி சதுக்கத்தில் நடந்தது.[4] [5] [6]
சான்றுகள்
தொகு- ↑ "Bhutan: a land in frozen time". BBC news. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
- ↑ Thimphu#cite note-Brown.2C p. 98-15
- ↑ "Trade Fair". Handicraft Association of Bhutan. Archived from the original on 2013-06-20. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
- ↑ BHUTAN360 . (2012, May 9). Retrieved from http://bhutan-360.com/attractions-in-thimphu/
- ↑ "4th INDO – BHUTAN FRIENDSHIP CAR RALLY 2011". FRIENDSHIP CAR RALLY ASSOCIATION.
- ↑ Thimphu#cite note-Brown.2C p. 98-15