மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி

மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி (Manipal College of Dental Sciences, Manipal) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மணிப்பால் நகரத்தில் அமைந்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1970 ஆம் ஆண்டில் இந்திய பல் மருத்துவ ஆட்சிக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றது.

மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி
Manipal College of Dental Sciences, Manipal
குறிக்கோளுரை"அறிவே ஆற்றல்"
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்1965
நிருவாகப் பணியாளர்
300
அமைவிடம், ,
13°21′15.2″N 74°47′22.7″E / 13.354222°N 74.789639°E / 13.354222; 74.789639
வளாகம்புறநகர்an
கல்வித்தலைவர்மருத்துவர் மோனிகா சார்லோட்டு சாலமன்

இந்தியாவின் முதல் தனியார் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் இந்தியாவின் 14 ஆவது பல் மருத்துவக் கல்லூரி என்ற சிறப்புகளை இக்கல்லூரி பெற்றுள்ளது. மணிப்பால் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான இக்கல்லூரி 2006 ஆம் ஆண்டு மே மாதம் 29-30 தேதியில் ரைன்லேண்டு தொழில்நுட்ப ஆய்வுச் சங்கம் சான்றிதழ் தணிக்கை முடித்து இந்நிறுவனத்திற்கு ஐ.எசு.ஓ 9001:2000 சான்றிதழுக்காக பரிந்துரைத்தது

கல்லூரியின் முதல் முதல்வராக மருத்துவர் சுந்தர் வசிராணி செயல்பட்டார். இதைத் தொடர்ந்து மும்பை மருத்துவர் கே.எல். சோரியும் பின்னர் மருத்துவர் கே.எசு. பட்டும் முதல்வர்களாக இருந்தனர். காலம் செல்லச் செல்ல இன்னும் பலர் இப்பட்டியலில் சேர்த்துள்ளனர். 1972 ஆம் ஆண்டு முதல் இங்கு பல் மருத்துவத்தில் முதுநிலை படிப்புத் திட்டமும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

தரம்

தொகு
 
மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி

2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசையில் இந்தியாவின் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்தது.[1]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு