மணிப்பூர் தமிழ்ச் சமூகம்

மணிப்பூர் தமிழ் சமூகம் (Manipur Tamil community) வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் தமிழர்களைக் குறிக்கிறது. இம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் உள்ளனர். பெரும்பாலும் மியான்மர் நாட்டு எல்லைக்கு அருகில் இவர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக மியான்மர் நாட்டு எல்லைக்கருகில் அமைந்துள்ள மோரே நகரில் மட்டும் 17000 தமிழர்கள் வசிக்கின்றனர்.[1] மணிப்பூரில் வசிக்கும் தமிழர்களுக்கு மியான்மரில் உறவினர்கள் மற்றும் வணிக தொடர்புகள் உள்ளன. இத்தொடர்புகள் எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்கும் ஒரு மதிப்புமிக்க வலையமைப்பாகும்.

வரலாறு தொகு

வங்கிகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை பெருந்தலைவர் நே வின் தேசியமயமாக்கியபோது பர்மாவிலிருந்து தமிழர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களில் சிலர் தமிழ்நாட்டிலிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தனர். வாழ்க்கையை மிகவும் கடினமாக உணர்ந்த சிலர் நிலம் வழியாக பர்மாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர். எல்லை நகரமான மோரேயில் பர்மிய குடியேற்றம் இருந்ததால் அவர்கள் மீண்டும் பர்மாவுக்குள் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் விளைவாக இவர்கள் அங்கேயே குடியேறி விட்டனர்.[2]

1992 ஆம் ஆண்டில் குக்கி இன போராளிகள் தமிழர்களின் வர்த்தகத்திற்கு அதிக வரி விதிக்க முயன்றதன் காரணமாக தமிழ் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன.[3]

மணிப்பூர் அரசுக்குச் சொந்தமான சிறீ அங்காள பரமேசுவரி சிறீ முனீசுவரர் கோயில் அமைந்துள்ள நிலத்தை மியான்மருக்கு விட்டுக்கொடுப்பதைத் தடுக்கும் சட்டப் போரில் மிக சமீபத்தில் தமிழ் சமூகம் ஈடுபட்டது.[4][5] இந்த கோவிலின் வாயில்களில் ஒன்று பர்மிய பிரதேசத்தில் உள்ளது.[6]

சமயம் தொகு

சிறீ அங்காள பரமேசுவரி சிறீ முனீசுவரர் கோயில் தவிர வீரமாகாளி கோவில், சிறீ பத்ரகாளி கோவில், சிறீ பெரியபாளையத்தம்மன் கோவில் முதலான கோவில்கள் மோரே நகரில் அமைந்துள்ளன. தமிழ் இசுலாமியர்களுக்கான தமிர் இ மில்லத் பள்ளிவாசல் ஒன்றும் தமிழ் கிறித்துவர்களுக்கான புனித சியார்ச்சு பேராலயம் ஒன்றும் மோரே நகரத்தில் அமைந்துள்ளன.[7]

காஞ்சி காமகோடி பீடம் மணிப்பூரில் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.[8]

பொழுதுபோக்கு அம்சங்கள் தொகு

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மொழித் திரைப்படங்கள் மெல்ல மெல்ல இங்கு பிரபலமடைந்து வருகின்றன. தனிநாடு கோரிக்கைக்காக போராடிவரும் காங்லிபெக் மக்கள் புரட்சி அமைப்பு போராளிகள் இந்தி மொழி திரைப்படங்களை தடை செய்தது இதற்குக் காரணமாகும்.[9][10][11]

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 2011-07-05. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 17 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Archived copy". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Eastern Mirror | The latest and breaking news from Nagaland, northeast India and India, current affairs in regional politics, latest updates on business news, sports and entertainment". www.easternmirrornagaland.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
  6. "Archived copy". Archived from the original on 2010-11-19. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Archived copy". Archived from the original on 2011-07-05. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Archived copy". Archived from the original on 2010-11-19. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. Pike, John. "People's Revolutionary Party of Kangleipak (PREPAK)". http://www.globalsecurity.org/military/world/para/prepak.htm. 
  10. "No Amitabh, SRK films in Manipur – Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/calcutta-times/No-Amitabh-SRK-films-in-Manipur/articleshow/733398.cms. 
  11. "Archived copy". Archived from the original on 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-04.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)