மணிப் பிரவாளப் பரம்பரை
நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு வியாக்கியானங்கள் எழுதிய உரையாசிரியர்களைப்போல, ஏனைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றிற்கும் சிலர் உரை கண்டனர். வியாக்கியான உரையாசிரியர்களைப் போலவே, வடமொழிச் சொற்களையும், பேச்சு மொழியையும் கையாண்டு, சொற்பொழிவு செய்யும் முறையில் உரைகளை இயற்றினர். அவ்வுரைகளில கொச்சை மொழிகளும், நாட்டுக்கதைகளும் பழமொழியும், மரபுத்தொடரும் மிகுதியாக இடம் பெறுகின்றன.
பரம்பரையினர்
தொகு- திருக்கோவையாருக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்
- நீலகேசிக்கு உரை வடித்த சமய திவாகரவாமன முனிவர்
- திருக்குறளுக்கு உரை எழுதிய பரிதி
- புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர்
- மூவருலாவின் பழைய உரையாசிரியர்
- தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஆகியவர்கள் இப்பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கன ஆகும்.
சிறப்புகள்
தொகுஇப்பரம்பரை உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு மொழி, பழக்கவழக்கம், சமுதாய நிலை, நாட்டின் போக்கு ஆகியவற்றை அவ்வுரைகள் மிகத்தெளிவாக எதிரொலிக்கின்றன. பேசுவதுபோலவே எழுதும் உரைநடையிலும் ஒருவகை இன்பமும், எழிலும், உயிரோட்டமும் இருப்பதைக் காணமுடிகிறது.