மணி மாலை
மணிமாலை 1941ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் தொகைத் திரைப்படம் ஆகும்.[1] இது ஆஷாடபூதி, மைனரின் காதல், அப்பூதி அடிகள், நவீன மார்கண்டேயர் என்னும் நான்கு தனித்தனி நகைச்சுவைக் குறும்படங்களைக் கொண்டதாகும். இக் குறும்படங்கள் ஒவ்வொன்றும் பிராம் சேத்னா உள்ளிட்ட வெவ்வேறு இயக்குநரால் உருவாக்கப்பட்டு வெவ்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியானது. இந்தத் தொகைப்படம் வெற்றிபெற்றது.
மணிமாலை | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | பிராம் சேத்னா |
தயாரிப்பு | ஓரியண்டல் பிலிம்ஸ் |
நடிப்பு | பி. வி. ரங்காச்சாரி கே. கே. ஆதிலட்சுமி டி. எஸ். ஜெயா |
வெளியீடு | நவம்பர் 22, 1941 |
ஓட்டம் | . |
நீளம் | 3650 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு
|
|
தயாரிப்பு
தொகுமணி மாலை என்பது நான்கு குறும்பட நகைச்சுவைத் திரைப்படங்களைக் கொண்டு தொகுத்தத் திரைப்படமாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது. முதல், ஆஷாடபூதி தீண்டாமையின் தீவிர சிக்கலை எளிய முறையில் ஆராய்கிறது. மேலும் இப்படம் பிராம் சேத்னாவால் இயக்கப்பட்டது. இரண்டாவது, மைனரின் காதல், ஒரு "மைனர்" [a] தனது தாயின் விருப்பப்படி திருமணம் செய்ய மறுக்கும் மைனர் திரிமணமான சலவைக்காரி மேல் காதல் கொண்டவராக இருக்கிறார். அக்காதல் என்னமாதிரியான சிக்கல்களை உண்டாக்குகிறது என்பது கதை. மூன்றாவது படம் அப்பூதி அடிகள், கடவுள் பக்தியை நகைச்சுவையுடன் கையாளப்பட்டுள்ளக் கதை. நான்காவது படம், நவீன மார்க்கண்டேயர், மார்கண்டேயரின் கதையை நகைச்சுவையாகச் சொல்லி ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். மணிமாலை படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள வேல் பிக்சர்ஸ் படப்பிடிப்பு அரங்கில் உருவவாம் பெற்றது.
வெளியீடும் வரவேற்பும்
தொகுமணி மாலை 1941 இல் வெளியாகி, வணிக ரீதியாக வெற்றி பெற்றது; கிருஷ்ணசாமியின் கூற்றுப்படி, “இப்படத்தில் அந்த சகாப்தத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர்களின் நடிப்பு” வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.[2]
குறிப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பலே.. பலே.. 'பஃபே' விருதுகள்!, கட்டுரை, எஸ். எஸ். லெனின், இந்து தமிழ் (நாளிதழ்), 2020 திசம்பர் 4
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Randor Guy (31 August 2013). "Mani Malai (1941)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180911090629/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/mani-malai-1941/article5079214.ece.