ஏ. டி. கிருஷ்ணசாமி
ஏ. டி. கிருஷ்ணசாமி (A. T. Krishnaswamy, 1905 – திசம்பர் 24, 1987) தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும், கதை வசன எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். 1941 இல் வெளிவந்த சபாபதி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.[1]
ஏ. டி. கிருஷ்ணசாமி | |
---|---|
1940களில் கிருஷ்ணசாமி | |
பிறப்பு | 1905 |
இறப்பு | திசம்பர் 24, 1987 (அகவை 81–82) |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதை, வசன எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1930கள் - 1971 |
அறியப்படுவது | சபாபதி (1941 திரைப்படம்) |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி படிக்கும் போதே நாடகங்கள் எழுதுவதிலும் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டார். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபா நாடகக் கம்பனியில் இணைந்து நடித்தார்.[1]
கிருஷ்ணசுவாமி 1934-ஆம் ஆண்டிலேயே ஏ. வி. மெய்யப்பனின் தொடர்புகள் ஏற்பட்டது. அவரது சரசுவதி ஸ்டோர்சு என்ற இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்ட நாடக இசைத்தட்டுகளுக்கு வசனம் எழுதிக் கொடுத்தார்.[1] ஏவிஎம் நிறுவனம் தயாரித்த நந்தகுமார் (1938) திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாடிய ‘யுக தர்ம முறையே' என்ற பாடலை எழுதினார்.[1] இதே படத்தில் லலிதா வெங்கடராமன் பின்னணி பாடிய ‘தீனதயாபரனே திவ்யனே' என்ற பாடலையும் இயற்றினார்.[1]
ஏவிஎம்மின் சபாபதி (1941) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1] கன்னடத்தில் வெளியான சத்ய ஹரிச்சந்திரா என்ற வெற்றிப் படத்தை இயக்கினார். இது 1944 இல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. தமிழ்ப் படத்திற்கு இவரே வசனங்களை எழுதினார்.[1] தொடர்ந்து வித்யாபதி (1946), மனம் ஒரு குரங்கு ஆகிய திரைப்படங்களை இயக்கினார். அறிவாளி இவரது மற்றுமொரு வெற்றிப் படம் ஆகும்.[2]
இயக்கிய திரைப்படங்கள்
தொகு- சபாபதி (1941)
- மணி மாலை (1941)
- ஹரிச்சந்திரா (1944)
- ஸ்ரீ வள்ளி (1945)
- வித்யாபதி (1946)
- தேவமனோகரி (1951)
- பொன்வயல் (1954, தயாரிப்பு, இயக்கம்)
- அறிவாளி (1963, தயாரிப்பு, இயக்கம்)
- மனம் ஒரு குரங்கு (1967)
- அருட்பெருஞ்ஜோதி (1971)
திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு- விஜயலட்சுமி (1946)
- வித்யாபதி (1946)
- கங்கணம் (1947)
- மோகனசுந்தரம்
- ராஜாம்பாள் (1951)
- குமாஸ்தா (1953)
- தூக்குத் தூக்கி (1954)
- மேனகா (1955)
- சதாரம் (1956)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 வாமனன் (24 திசம்பர் 2018). "கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 159 | ஏவி.எம்மிலிருந்து அருட்பெரும்ஜோதி வரை சென்ற ஏ.டி.கே!". தினமலர் (Nellai) இம் மூலத்தில் இருந்து 2018-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181230045916/http://www.dinamalarnellai.com/web/news/62669.
- ↑ Randor Guy (1 January 2011). "Deva Manohari 1951". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/Devamanohari-1951/article15502198.ece.