மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயில்
மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] இக்கோயில் மணியம்பாடியில் மூக்கனூர் மலை அடிவாரத்தில், ஒன்பது ஏக்கர் பரப்பளவில், உள்ளது.
அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தர்மபுரி |
அமைவிடம்: | மணியம்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பாப்பிரெட்டிப்பட்டி |
மக்களவைத் தொகுதி: | தர்மபுரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | வெங்கட்ரமணசுவாமி |
தாயார்: | மங்கம்மாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | பங்குனித் தேரோட்டம், வைகுண்ட ஏகாதசி, 5 சனிக்கிழமைகள் |
வரலாறு | |
கட்டிய நாள்: | கி.பி. 1285[சான்று தேவை] |
அமைத்தவர்: | பையம்மா ராணி |
வரலாறு
தொகுஇக்கோயில் 1285 ஆம் ஆண்டு, பையம்மா ராணி என்பவரால் கட்டப்பட்டதாக கிழக்குபுறம் உள்ள கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் வெங்கட்ரமணசுவாமி, மங்கம்மாள் சன்னதிகளும், துளசியம்மாள் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திர தேரோட்டவிழா நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அபிஷேகம், பூசைகள் நடைபெறுகிறது. கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)