மணி மேல்நிலைப் பள்ளி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் ஒரு மேல்நிலைப்பள்ளி

மணி மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், பாப்பநாயக்கன்பாளையத்தில் செயற்பட்டுவரும் ஒரு மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியானது 1954ஆம் ஆண்டு குப்புசாமி நாயுடு அறக்கட்டளையால் உயர்நிலைப் பள்ளியாக துவக்கப்பட்டது. இப்பள்ளியில் 2018 -2019 ஆண்டு காலகட்டத்தில் 969 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம், சாரணர் இயக்கம், சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

மணி மேல்நிலைப் பள்ளி
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
உருவாக்கம்1954
அமைவிடம்,

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "மணி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு". செய்தி. தினமணி. 3 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_மேல்நிலைப்_பள்ளி&oldid=3577966" இலிருந்து மீள்விக்கப்பட்டது