மண்டல அறிவியல் மையம், கோவை

மண்டல அறிவியல் மையம்,கோவை தொகு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா வர்த்தக வளாகம் அருகே அமைந்துள்ள மண்டல அறிவியல் மையம் ,தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல்திட்டத்துடன் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது . 2013 ஜூலை 13 ஆம் தேதி , திருமதி. சந்த்ரேஷ் குமாரி கடோச், கௌரவ அமைச்சர் கலாநிதி அவர்களின் தலைமையில் துவக்கப்பட்டது. 4000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள விஞ்ஞான மையம், மூன்று நிரந்தர காட்சியகங்களை கொண்டுள்ளது. துணி உற்பத்தி கண்காட்சி (ஹால் ஆப் டெக்ஸ்டைல்), இயந்திரங்கள் இயங்கும் விதம் (ஹவ் திங்ஸ் வொர்க் அண்ட் ஃபன்னி சைன்ஸ்) மற்றும் தற்காலிக கண்காட்சி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த அறிவியல் அருங்காட்சியகம் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா மியூசியம் போன்றுள்ளது. இதில் அறிவியல் காட்சிகள் மற்றும் ஆர்ப்பாட்ட மாதிரிகள் உள்ளன. முதலாவது பகுதியில் நெசவு தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அடுத்த பகுதி வானியல் வரலாறு பற்றியது.இங்கு கலிலியோவிலிருந்து நவீன வானியல் வரை விளக்கப்படங்கள் உள்ளன. மூன்றாவது பகுதி அறிவியல் கொள்கைகளை மக்கள் படித்து மற்றும் கற்று செயல்படுத்தும் விதமாக விரிவான விளக்கங்கள் உள்ளன.

இவ்வரங்கில் பல பொறியியல் காட்சிகள் உள்ளன. மற்றும் ஒவ்வொன்றிற்கும் பின்னால் உள்ள தொழில்நுட்பக் கொள்கைகள் விளக்கமாக தரப்பட்டு உள்ளது.ஒரு முப்பரிமாண அரங்கம் உள்ளது,இதில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களைக் குறித்து ஒரு குறுகிய படத்தைக் காட்டுகின்றனர்.

அரங்கின் வெளியே குழந்தைகள் விளையாட உபகரணங்கள் உள்ளன. மேலும் இப்பூங்காவில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் எளிய விளக்க மாதிரிகளும் உள்ளன. விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் அறிவியல் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள இந்த மையம் பெரிதும் துணை செய்வதாக அமைந்துள்ளது.


[1]

  1. http://www.destinationinfinity.org/2015/07/24/regional-science-center-coimbatore/ ncsm.gov.in › Past Events