மதன் கோபால் காந்தி
முனைவர் மதன் ஜி. காந்தி (Dr. Madan G. Gandhi ஆகஸ்ட் 31, 1940 - ஜனவரி 26, 2019) கல்வியாளர் மற்றும் கவிஞர் ஆவார். [1] [2]
மதன் கோபால் காந்தி | |
---|---|
பிறப்பு | லாகூர் | ஆகத்து 31, 1940
இறப்பு | சனவரி 26, 2019 குருகிராம், இந்தியா | (அகவை 78)
பணி | எழுத்தாளர், கவிஞர் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஆகஸ்ட் 31, 1940 அன்று லாகூரில் ஸ்ரீமதி சாவித்ரி தேவி மற்றும் கேவால் கிரிஷன் ஆகியோருக்கு இவர் மகனாகப் பிறந்தார். இந்தியப் பிரிப்பிற்குப் பிறகு இவரது குடும்பம் இந்தியா சென்றனர். பின்னர் இவர் 1958 ஆம் ஆண்டில் எச். ஏ. ஜெயின் கல்லூரியில் எஃப்.எஸ் சி பட்டமும், 1960 ஆம் ஆண்டில் டி. ஏ. வி கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் பயின்றார்.[3] [4]
கல்வி
தொகுசண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1964ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1966 இல் பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவில் இரண்டாவது முதுகலை பட்டமும் 1974 இல் சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[5]
படைப்புகள்
தொகுஇவர் லாலா லஜபதி ராயின் படைப்புகளின் ஆறு தொகுதிகளைத் திருத்தியுள்ளார்.
- சர் சோட்டு ராம்:எ பொலிடிகல் பயோகிராபி
- காந்தி & மார்க்ஸ்
- காந்தியன் ஈஸ்தடிக்ஸ்
- மாடர்ன் பொலிடிகல் அனலிசஸ்
- மாடர்ன் பொலிடிகல் தியரி
பிற மொழிகளில் இவரது படைப்புகள்
தொகுமதன் ஜி காந்தியின் கவிதைகள் பாரசீகம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. , மதன் ஜி காந்தியின் சிறந்த படைப்புகள் எனும் பெயரில் காதிஜே கவாரி, நஜ்மே கவாரி ஆகியோர் பாரசீக மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். [6] இத்தாலிய மொழியில் மரியா மிராக்லியா, [7] பத்மாஜா நாராயணன் தமிழில் பெடல்ஸ் ஆஃப் ஃபேம் எனும் பெயரிலும் [8] இந்தியில் ஜெய் கிருஷன் சுக்லா ஸ்வர் சே சாத் அனந்த் இவரது படைப்புகளை மொழிபெயர்த்துள்ளானர்.. [9]
விருதுகள்
தொகுகாந்தி தனது வாழ்நாளில் பல விருதுகளைப் பெற்றார். [10]
சான்றுகள்
தொகு- ↑ "AXLEPIN - News". Axlepinpublishing.com.ph. Archived from the original on 2015-07-09. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
- ↑ "Early childhood". Yayatimadanggandhi.org. Archived from the original on 2015-07-09. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
- ↑ "RBT Award Judges". Xpresspublications.com. Archived from the original on 2015-07-09. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.
- ↑ The Best Works of Yayati Madan G Gandhi/بهترین آثار ملک الشعراء، یایاتی مدن جی گاندی (Persian) Paperback – 2016.
- ↑ Greatest Works of Poet Laureate Yayati Madan G Gandhi (First Edition, 2015) (Italian) Paperback – 2015.
- ↑ One of the Greatest Works of YAYATI MADAN G GANDHI Petals of Flame! / நெருப்பிதழ்கள்!.
- ↑ Swar Se Saadh Anant / स्वर से साध अनन्त (Hindi) Paperback – 2016.
- ↑ "Madan Gopal Gandhi (author)". Authorsden.com. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.