மதுசூதன் மாஞ்சா
இந்தியக் கட்டடம்
மதுசூதன் மாஞ்சா (Madhusudan Mancha) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா நகரத்திலுள்ள, தாகுரியா பகுதியில் அமைந்துள்ள ஓர் அரங்கமாகும்.[1] வங்காள மொழி கவிஞர் மைக்கேல் மதுசூதன் தத்தாவின் பெயரால் அரங்கம் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த அரங்கம் மேற்கு வங்காள அரசாங்கத்தின் தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறையால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.[2] இந்த அரங்கம் தொடர்ந்து திரையரங்குகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாளன்று மேற்கு வங்காள முதல்வராக இருந்த ஜோதி பாசுவால் திறந்து வைக்கப்பட்டது.[2]
மதுசூதன் மாஞ்சா Madhusudan Mancha | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
இடம் | தாக்க்குரியா, கொல்கத்தா |
முகவரி | 2, சி.வி. இராமன் சாலை. அ.கு.எண்: 700068 |
திறக்கப்பட்டது | 12 அக்டோபர் 1995 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madhusudan Mancha". Times City. பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.
- ↑ 2.0 2.1 "Madhusudan Mancha". West Bengal Government. Archived from the original on 20 February 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.