மதுரை முக்குறுணிப் பிள்ளையார்

முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதிக்கும் சுந்தரேசுவரர் சன்னதிக்கும் இடையே கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்குப் புறம் அமைந்துள்ளது. இந்த பிள்ளையார் சிலை மிகப் பெரியது. பத்தடி உயரமிருக்கலாம்.

மதுரை முக்குறுணிப் பிள்ளையார்

வரலாறு

தொகு

மீனாட்சி அம்மன் கோவில் கட்டிய போது மன்னர் திருமலை நாயக்கர் கோவில் கட்ட மண் வேண்டி மதுரை நகருக்கு வெளியில் அமைந்துள்ள வண்டியூர் என்ற இடத்தில் ஒரு பெரிய தெப்பக்குளத்தை வெட்டினார். அப்போது அங்குள்ள ஒரு பாறையை வெட்டி எடுத்து மிகப்பெரிய பிள்ளையார் சிலையை செய்து மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. பின்னாளில் முக்குறுணி பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது..

விநாயக சதுர்த்தி கொழுக்கட்டை

தொகு

விநாயக சதுர்த்தி மீனாட்சி அம்மன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின்போது இந்த முக்குறுணிப் பிள்ளையாருக்கு மிகப் பெரிய ஒற்றைக் கொழுக்கட்டையைப் படைக்கிறார்கள். இந்தக் கொழுக்கட்டை செய்வதற்கு மூன்று குறுணி அரிசி பயன்படுத்தப் படுகிறதாம். குறுணி என்பது பண்டைய பாண்டிய நாட்டு முகத்தலளவை ஆகும். அதாவது ஒரு குறுணி என்பது நான்கு படிகள். மூன்று குறுணி என்றால் 12 படிகள். பிள்ளையாருக்கு படைக்கப்பட்ட பின் கொழுக்கட்டை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது.

மூன்று குறுணி அரிசியை மாவாக இடித்து, அதில் ஒரே கொழுக்கட்டையாகச் செய்து, விநாயக சதுர்த்திக்குப் படைப்பதால் இந்தப் பிள்ளையாரை 'முக்குறுணிப் பிள்ளையார்' என்கின்றனர்.

மேலும் பார்க்க

தொகு