மதுரை வடக்கு வட்டம்

மதுரை (வடக்கு) வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். [1]. மதுரை வடக்கு வட்டம் 1 அக்டோபர் 1967ல் நிறுவப்பட்டது. இவ்வருவாய் வட்டத்தில் 82 வருவாய் கிராமங்கள் உள்ளது. இவ்வட்டத்தில் மொத்தம் 16,926 ஹெக்டேர் விளைநிலம் உள்ளது. அதில் நன்செய் நிலம் 8,125 ஹெக்டேராகவும்; புன்செய் நிலம் 4,106 ஹெக்டேராகவும் உள்ளது.

இவ்வட்டத்தில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பரவை பேரூராட்சி உள்ளது. இவ்வட்டத்தில் 14 கல்லூரிகளும், உயர்நிலைப் பள்ளிகளும், மேனிலைப் பள்ளிகளும் உள்ளது. இவ்வட்டத்தில் ஒரு அரசு மருத்துவ மனையும்; 24 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது.

மதுரை வடக்கு வட்டத்தில் 5 உள்வட்டங்களும், 82 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2] அவைகள்;

  1. சாத்தமங்கலம்
  2. சமயநல்லூர்
  3. குலமங்கலம்
  4. கூளப்பாண்டி
  5. சத்திரப்பட்டி

மக்கள்தொகை பரம்பல்

தொகு

1,25,017 குடும்பகள் கொண்ட மதுரை வடக்கு வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 4,94,430 ஆகும். அதில் ஆண்கள் 2,48,631 ஆகவும்; பெண்கள் 2,45,799 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.98% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 52,614 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் 62.4% மக்கள் நகர்புறங்களிலும்; 37.6% மக்கள் கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர்.

மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 83,890 மற்றும் 2,488 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 4,40,924 (89.18%), இசுலாமியர் 28,889 (5.84%), கிறித்தவர்கள் 22,714 (4.59%) ஆகவும் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_வடக்கு_வட்டம்&oldid=3119218" இலிருந்து மீள்விக்கப்பட்டது