மது தயாரித்தல்

மது தயாரித்தல் (ஒயின்) என்பது   திராட்சை அல்லது பிற மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறை நொதிக்கச்செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டு ஒயின் போத்தல்களில் அடைக்கப்படுகிறது. பெரும்பாலான மதுவகைகள் திராட்சைகளைக் கொண்டு செய்யப்பட்டாலும், மற்ற பழங்கள் அல்லது தாவரங்களிலிருந்து இது தயாரிக்கப்படலாம். மீட் மதுவானது தேன் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு மது ஆகும்.

மது திராட்சை
திராட்சையின் உடற்கூறியல், நாம் காண்பது அதனுள் இருக்கும் உள்பகுதிகள் ஆகும்.
நொறுக்கியில் இருந்து வெளியேற்றப்படும் நொறுக்கப்பட்ட திராட்சைகள்

மதுபானத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்: அசைவில்லாத மது உற்பத்தி முறை (கார்பனேற்றம் இல்லாமல்) மற்றும் ஒளிர் ஒயின் உற்பத்தி முறை (கார்பனேற்றம் - இயற்கை அல்லது உட்செலுத்தப்படுதல்).

மது மற்றும் மதுபானம் பற்றிய அறிவியல் ஒனாலஜி என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக மதுவைத் தயாரிப்பவர் வைன்மேக்கர் அல்லது வின்ட்னெர் என்று அழைக்கப்படுகிறார்.

செயல்முறைகள் தொகு

திராட்சை சாறெடுக்க முதலில் திராட்சையை அரைத்து கூழாக்க வேண்டும், பின்பு ௦.250 மி.கி பொட்டாசியம் மெட்டா பைசல்பேட், ஒரு லிட்டர் தண்ணிரில் சேர்த்து அதனுடன் 1:10 என்ற அளவில் ஈஸ்டும் சேர்க்கப்பட்டு குறைந்த வெப்பத்தில் பத்து நாட்களுக்கு குறையாமல் வைக்கப்பட வேண்டும். பல இரசாயன மாற்றங்களுக்குப் பிறகு மதுவின் மணம் வீசும். சரியான கூட்டுப் பொருள்கள் சேர்க்கவில்லை என்றாலும், வைக்கவில்லை என்றாலும் அசிட்டிக் அமில பாக்டிரியா உள்ளே நுழைந்து இந்த சாற்றை வினிகராகவும் , நீராகவும் மாற்றிவிடும்.

மதுஉற்பத்தி நாடுகள் தொகு

உலகின் முதல் 15 மது உற்பத்தி நாடுகளின் பட்டியல்.[1]

Country 2010 2011 2012 2013 2014
  பிரான்சு 44,381 50,757 41,548 42,004 46,698
  இத்தாலி 48,525 42,772 45,616 52,029 44,739
  எசுப்பானியா 35,353 33,397 31,123 45,650 41,620
  ஐக்கிய அமெரிக்கா 20,887 19,140 21,650 23,590 22,300
  அர்கெந்தீனா 16,250 15,473 11,778 14,984 15,197
  ஆத்திரேலியா 11,420 11,180 12,260 12,500 12,000
  தென்னாப்பிரிக்கா 9,327 9,725 10,569 10,982 11,316
  சீனா 13,000 13,200 13,511 11,780 11,178
  சிலி 8,844 10,464 12,554 12,820 10,500
  செருமனி 6,906 9,132 9,012 8,409 9,334
  போர்த்துகல் 7,148 5,622 6,308 6,237 6,195
  உருசியா 6,400 6,353 6,400 6,200 6,000
  உருமேனியா 3,287 4,058 3,311 5,113 4,093
  நியூசிலாந்து 1,900 2,350 1,940 2,484 3,204
  கிரேக்க நாடு 2,950 2,750 3,115 3,343 2,900
Rest of the World 27,847 30,906 27,194 31,177 31,526
World 264,425 267,279 257,889 291,902 278,800

மேற்கோள்கள் தொகு

  1. [1], Italian Wine Central.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_தயாரித்தல்&oldid=2804187" இலிருந்து மீள்விக்கப்பட்டது