மது நடராஜ்
மது நடராஜ் (பிறப்பு: பிப்ரவரி 24, 1971) பெங்களூரில் வசிக்கும் ஒரு இந்திய பாரம்பரிய, சமகால நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ஆவார்.[1][2]
மது நடராஜ் | |
---|---|
பிறப்பு | 21 பெப்பிரவரி 1971 (அகவை 53) பெங்களூர் |
பணி | கலைஞர், நடன இயக்குநர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமது நடராஜ் பிப்ரவரி 24, 1971 அன்று பெங்களூரில் எம்.எஸ்.நடராஜன் மற்றும் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரான மாயா ராவ் ஆகியோருக்குப் பிறந்தார்.[2][3]
கல்வி
தொகுமது நடராஜ் பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் வணிகத்துறையில் இளங்கலை பட்டம் (பி.காம்) பெற்றார். பெங்களூரில் உள்ள கதக் மற்றும் ஆடற்கலை நாட்டிய பயிற்சி பள்ளியில் சேர்ந்து நடனத்தைக் கற்றுக்கொண்டார்.
மது நடராஜ் தனது தாயார் மாயா ராவ், அத்தை சித்ரா வேணுகோபால் மற்றும் முன்னா சுக்லா ஆகியோரின் கீழ் கதக் நடனத்தில் பயிற்சி பெற்றார்.[1][2]
மது நடராஜ் நியூயார்க்கின் ஜோஸ் லிமோன் மையத்தில் கரேன் பாட்டரிடமிருந்து சமகால நடனத்தில் பயிற்சி பெற்றார். இவர் கரேன் பாட்டர் மற்றும் சாரா பியர்சன் ஆகியோரிடமிருந்து இந்த நடனத்தைக் கற்றுக்கொண்டார்.[2]
இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் தற்காப்பு நடனங்களில் பயிற்சி பெற்ற இவர், பி.கே.எஸ் ஐயங்கார் நுட்பத்தைப் பயன்படுத்தி யோகா பயின்றார்.[1]
அவர் பாரதிய வித்யா பவனில் இதழியல் துறையில் பட்டம் பயின்றார். மேலும் 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4]
தொழில்
தொகு1995 ஆம் ஆண்டில் நடராஜ் எஸ்.டி.இ.எம். எனப்படும் ஒரு நடன நிறுவனத்தை அமைத்தார். அவை முறையே விண்வெளி, நேரம், ஆற்றல் மற்றும் இயக்கத்தை குறிப்பிடுவன ஆகும். இந்த நிறுவனம், கதக் மற்றும் நடன அமைப்பான நாட்டிய பயிற்சி பள்ளியின் செயல்திறன் பிரிவாக இயங்குகிறது.[5]
மது நடராஜ் கஜுராஹோவில் நடைபெற்ற கஜுராஹோ விழா, தில்லியில் நடந்த புராண குய்லா விழா, அகமதாபாத் சங்கீத நாடக அகாதமி ஏற்பாடு செய்த நிருத்ய கிருதி; பாபிலோனின் திருவிழா; கதக் மகோத்சவம், டெல்லி, லக்னோ கனடா மற்றும் டொராண்டோவின் கலாநிதி சர்வதேச நடன விழா போன்ற பல்வேறு நடன விழாக்களில் பங்கு பெற்றுள்ளார்.[2]
விருதுகள்
தொகுஇவர், கதக் நடனத்தில் படைப்பு மற்றும் சோதனை நடனத் துறையில் திறமை காட்டியதற்காக 2010 ஆம் ஆண்டில் நடராஜ் சங்கீத நாடக அகாதமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புராஸ்கர் விருது பெற்றார்.[2] இவர் 'இந்தியா டுடே' பத்திரிகையின் 50 இளம் சாதனையாளர் விருதை வென்றார். இவர் 2011 இல் மோகன் கோக்கர் விருதையும் பெற்றார்.
மற்ற விருப்பங்கள்
தொகுமது நடராஜ் புத்தக வாசிப்பை நேசிப்பவராக உள்ளார். நடனம் முதல் பெண்கள் பிரச்சினைகள் வரை பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளும் எழுதுகிறார்.[6]
இவர், ஸ்டெம் (விண்வெளி, நேரம், ஆற்றல், இயக்கம்) எனப்படும் நடன நிறுவனத்தை நிர்வகிப்பதைத் தவிர, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கலாச்சார அமைப்புக்கான திட்டங்களை வடிவமைத்துள்ளார். மேலும், கலைநிகழ்ச்சிகளுக்கு ஒரு ஆதரவு அமைப்பை வழங்கும், புதிய திறமைகள் மற்றும் கருத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும், நடனம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் கலைக்கான முயற்சிகளைச் செய்யும் கிரியா என்கிற அமைப்பினை இவர் தொடங்கினார். நாட்டியத்திற்காக மாநில அளவிலான ஒரு அதிநவீன அமைப்பை அமைப்பதே இவரது கனவு ஆகும் என தெரிவித்துள்ளார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 1.2 Connections, Saigan. "Articles - KATHAK AS A SPRINGBOARD FOR CHOREOGRAPHY by Madhu Natraj". www.narthaki.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-27.
- ↑ இங்கு மேலே தாவவும்: 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "CUR_TITLE". sangeetnatak.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-27. பார்க்கப்பட்ட நாள் 2018-11-27.
- ↑ "Madhu Nataraj Kiran on her mother the iconic Maya Rao". mumsandstories.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-27.
- ↑ Kambanna, Manasa (2018-07-01). "Walking many roads" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/education/walking-many-roads/article24298118.ece.
- ↑ "Welcome to Stem Dance Kampni !". www.stemdancekampni.in. Archived from the original on 2018-10-18. பார்க்கப்பட்ட நாள் 2018-11-27.
- ↑ Shekhar, Divya (2018). "How poetry of 12th century women mystics impacted Madhu Natraj". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/how-poetry-of-12th-century-women-mystics-impacted-madhu-natraj/articleshow/62724980.cms.
- ↑ . https://www.deccanherald.com/content/115937/she-dares-different.html.