பேதிந்தி மது பிரியா (Madhu Priya) என்பவர் இந்தியத் தெலுங்கு பின்னணி பாடகி ஆவார். இவர் அடபில்லனம்மா நேனு அடபிலனானி என்ற நாட்டுப்புறப் பாடலின் மூலம் தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபலமானார்.[1] இவர் தெலுங்கு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு (தொடர் 1) நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார். இந்நிகழ்ச்சியின் 13ஆம் நாளன்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[2]

மது பிரியா
இயற்பெயர்பேதிந்தி மது பிரியா
பிறப்பு26 ஆகத்து 1997 (1997-08-26) (அகவை 26)
பிறப்பிடம்கோதாவரிகாணி, பெத்தபள்ளி, தெலங்காணா, இந்தியா
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்2008–முதல்

தொழில் தொகு

மது பிரியா, டக்கராக தூரங்கா படத்திற்காக பாடியதன் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். பிடா திரைப்படத்தின் "வச்சிண்டே" பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இவர் ஸ்டார் மா மெய் நிகழ்ச்சி தொடரான பிக் பாஸ் தெலுங்கில் பங்கேற்வர் ஆவார்.

இசைத்தொகுப்பு தொகு

ஆண்டு திரைப்படம் பாடல் இசை அமைப்பாளர் குறிப்புகள்
2011 டக்கரக தூரங்கா "பெத்த புலி" ரகு குஞ்சே அறிமுகம்
2017 பிடா "வச்சிண்டே" சக்திகாந்த் கார்த்திக் வெற்றி
  • சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சீமா விருது (தெலுங்கு)
  • சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2018 தொட்டு செசி சுடு "ராயே ராயே" ஜாம்8
நெலா டிக்கெட் "நேலா டிக்கெட்" சக்திகாந்த் கார்த்திக்
சாக்ஷ்யம் "செலியா சூடே" அர்ஷவர்தன் ராமேஷ்வர்
2020 சரிலேரு நீக்கேவரு "அவன் மிக அழகாக உள்ளான்" தேவி ஸ்ரீ பிரசாத் வெற்றி
  • சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான SIIMA விருது (தெலுங்கு)

தொலைக்காட்சி தொகு

ஆண்டு நிகழ்ச்சி பங்கு அலைவரிசை முடிவு
2017 பிக் பாஸ் (சீசன் 1) பங்கேற்பாளர் நட்சத்திர மா 14வது இடம் - 13 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்

மேற்கோள்கள் தொகு

  1. "Bigg Boss Telugu premiere episode highlight: Know more about the contestants of Junior NTR's show. Watch videos". 17 July 2017.
  2. "Bigg Boss Telugu episode 60 update: The housemates confront Diksha". 14 September 2017. https://timesofindia.indiatimes.com/tv/news/telugu/bigg-boss-telugu-updates/articleshow/59788945.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_பிரியா&oldid=3670137" இலிருந்து மீள்விக்கப்பட்டது