மத்திய ஓமியோபதி மன்றம்
மத்திய ஓமியோபதி மன்றம் (Central Council of Homeopathy) என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வமான அமைப்பாகும். இது 1973ஆம் ஆண்டில் இந்திய அரசால் அமைக்கப்பட்டது. இது இந்தியாவில் உயர்கல்வியைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நிபுணத்துவ மன்றங்களில் ஒன்றாகும்.[2] ஓமியோபதி கல்வித் தகுதி வழங்கப் படிப்புகளை நடத்த விரும்பும் எந்தவொரு நிறுவனமும் இந்த மன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும், இது ஓமியோபதிப் பாடத்திட்டத்தைப் பரிந்துரைப்பதுடன் ஓமியோபதி தொடர்பான மத்திய பதிவேடுகளைப் பராமரிக்கிறது.[3]
சுருக்கம் | CCH |
---|---|
உருவாக்கம் | 1973 |
தலைமையகம் |
|
சேவை பகுதி | இந்தியா |
தலைவர் | அனில் குராணா [1] |
தாய் அமைப்பு | ஆயுஷ் அமைச்சகம் |
வலைத்தளம் | www |
வரலாறு
தொகுமத்திய ஓமியோபதி மன்றச் சட்டம் 1973, (சட்டம் 59)இன் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனம். ஓமியோபதியில் பட்டம் அல்லது பட்டயப் படிப்பினை வழங்கும் இந்தியாவில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் அல்லது இதே போன்ற நிறுவனமும் மேலே குறிப்பிட்டுள்ள சட்டத்தின் அட்டவணைகளின் கீழ் பட்டியலிடப்படுவது மட்டுமின்றி, மத்திய ஓமியோபதி மன்றத்தின் ஒப்புதல் பெற்றால்தான் நிறுவனத்தினை நடத்த இயலும். மத்திய ஓமியோபதி மன்றம் குறிப்பிட்ட பாடத்திட்டத்தை வரையறுக்கிறது.[4] இந்தியாவில் உள்ள அனைத்து ஓமியோபதி மருத்துவர்களின் மைய பதிவேட்டைப் பராமரிக்கின்றது. இதைத்தவிர, ஓமியோபதி கற்பித்தல் நிறுவனங்களால் பராமரிக்கப்பட வேண்டிய பதிவுகளை அறிவிக்கிறது.[3]
2007ஆம் ஆண்டில், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மருத்துவ நிறுவனங்களுக்கான "குறைந்தபட்ச தரங்களை நிர்ணயிப்பதற்காக" 'மருத்துவ நிறுவனங்களுக்கான தேசிய மன்றம்' அமைத்தது. மத்திய ஒமியோபதி மன்ற பிரதிநிதி இந்த தேசிய மன்றத்தின் முறையான உறுப்பினராகவும் உள்ளார்.[5]
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின்18.05.2018 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண் R-13040/61/2017-HD (தொழில்நுட்பம்), எச்.சி.சி சட்டம், 1973இன் கீழ், அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும், மன்றத்தின் செயல்பாடுகளைச் செய்வதற்கும் ஸ்ரீ நிலஞ்சன் சன்யால் தலைமையில் ஆளுமைக் குழு நியமிக்கப்பட்டது.
இளங்கலை ஓமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
தொகுமத்திய ஓமியோபதி மன்றம், இளங்கலை ஓமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பி.எச்.எம்.எஸ்) பட்டப் படிப்பினை ஒழுங்குபடுத்துகிறது. இந்த படிப்பானது ஒரு வருட உள்ளகப் பயிற்சி உட்பட ஐந்தரை வருடத்திற்குப் பிறகு வழங்கப்படும் பட்டப் படிப்பு இதுவாகும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ அதிகாரப்பூர்வ இணையதளம்
- ↑ "Professional Councils". University Grants Commission (UGC) website. Archived from the original on 2010-01-06.
- ↑ 3.0 3.1 "Education Plus: Homeopathy". தி இந்து. Mar 22, 2005 இம் மூலத்தில் இருந்து மே 29, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060529061811/http://www.hindu.com/edu/2005/03/22/stories/2005032200250300.htm.
- ↑ "Homeopathy not attractive among medical aspirants". தி இந்து. September 12, 2005 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 18, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090418051807/http://www.hindu.com/2005/09/12/stories/2005091218710300.htm.
- ↑ "National council for clinical establishments". தி இந்து. Apr 18, 2007 இம் மூலத்தில் இருந்து மே 1, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070501084810/http://www.hindu.com/2007/04/18/stories/2007041800710900.htm.
- ↑ Mandhani, Apoorva (August 8, 2017). "Gujarat HC Quashes Rules Permitting Common Counselling By State For Management Quota Seats In Ayurveda Colleges [Read Judgment"]. Live Law. http://www.livelaw.in/gujarat-hc-quashes-rules-permitting-common-counselling-state-management-quota-seats-ayurveda-colleges-read-judgment/.