மத்திய கிழக்கு பறவையியல் சங்கம்

பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்ட பறவையியல் மற்றும் பறவைக் கண்காணிப்பு சங்கமாகும்

மத்திய கிழக்கு பறவையியல் சங்கம் (Ornithological Society of the Middle East) பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்ட பறவையியல் மற்றும் பறவைக் கண்காணிப்பு சங்கமாகும்.

மத்திய கிழக்கு, காக்கேசியா மற்றும் மத்திய ஆசியாவின் பறவைகள் மீது ஆர்வமுள்ள மக்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள். 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துருக்கி பறவையியல் சங்கத்தின் தொடர் அமைப்பாக மத்திய கிழக்கு பறவையியல் சங்கம் நிறுவப்பட்டது, 2001 ஆம் ஆண்டில் மத்திய ஆசியா மற்றும் காக்கேசியா பகுதிகளுக்கும் இச்சங்கம் விரிவுபடுத்தப்பட்டது. பறவையியல் தரவுகளை சேகரித்தல், தொகுத்தல் மற்றும் வெளியிடுதல், பிராந்தியத்தில் பறவைகள் மீதான ஆர்வத்தையும் பாதுகாப்பையும் ஊக்குவித்தல், பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இயற்கை வரலாற்று சமூகங்களுக்கு பறவையியல் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் உதவி செய்தல் போன்றவை மத்திய கிழக்கு பறவையியல் சங்கத்தின் நோக்கங்களாகும்.

வெளியீடுகள் தொகு

சேண்டுகிரவுசு என்ற செய்தி இதழை இப்பறவையியல் சங்கம் வெளியிடுகிறது.

உறுப்பு நாடுகள் தொகு

கீழ்கண்ட மத்திய கிழக்கு நாடுகள் இச்சங்கத்தில் செயல்படும் உறுப்பினர்களாக உள்ளனர்:[1]

மேற்கோள்கள் தொகு

  1. Porter, Richard, and Warr, Effie, Middle East Birding and Conservation Organisations பரணிடப்பட்டது 2004-12-24 at the வந்தவழி இயந்திரம், Ornithological Society of the Middle East (official website)

புற இணைப்புகள் தொகு