மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force), 1983 ஜூன் 15ல் துவக்கப்பட்ட இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும். அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது. இதன் தலைமை செயலகம் புது தில்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை
உருவாக்கம்ஜூன் 15 1983
தலைமையகம்டெல்லி
தலைமை இயக்குநர்
ராஜீவ்
வலைத்தளம்[2]

வரலாறு

தொகு

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி 1969 மார்ச் பத்தாம் நாளில், 2,800 படைவீரர்களுடன் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. இதன் அப்போதைய பணி மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதாகும். பின்னர், 1983 ஜூன் பதினைந்தாம் நாளில் இயற்றப்பட்ட மற்றொரு சட்டத்தின் படி, ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டது. பின்னர், இதன் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு, மத்திய அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத்தொடங்கியது. இதன் மூலம் எல்லா விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன. இந்திய தலைநகருக்கு அச்சுறுத்தல் அதிகமானதையடுத்து, 2007 எப்ரல் 15 முதல் டெல்லி மாநகரக் காவல் இப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009 பிப்ரவரி 25ல் அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி தனியார் நிறுவனங்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியது. தற்போது இப்படையில் ஒரு லட்சத்தி இருபதாயிரம் படைவீரர்கள் உள்ளனர்.[1]

பணிகள்

தொகு

உலகில் உள்ள தொழிற்துறை பாதுகாப்புப் படைகளில் இப்படையே மிகப்பெரிய படையாகும். தற்போதைக்கு 300 தொழில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கிவருகிறது. அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், இராணுவ அமைவிடங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பாலைகள், கனரக ஆலைகள், எஃகு உலைகள், அணைக்கட்டுகள், உரக்கிடங்குகள், விமான நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், நாணய அச்சு ஆலைகள், சில பன்னாட்டு இந்திய தனியார் நிறுவனங்கள் போன்றவைகளுக்கு பாதுகாப்பளிக்கிறது. இவ்வமைப்பு பாதுகாப்பு மட்டுமன்றி தனியார் அமைப்புகளுக்கு பாதுகாப்புத்தொடர்பான அலோசனைகளும் அளித்துவருகிறது. இதன் ஆலோசனை மையங்கள் நாடுமுழுவதும் உள்ளன. தேர்தல் பணிகளின் போதும் இப்படை பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயனாளிகள்

தொகு

ஜம்ஷெட்பூர்டாட்டா ஸ்டீல், மும்பை செபி தலைமையகம், பெங்களூர் விதான சௌதா, ஒரிசா மைனிங் கோ(புவனேஸ்வர்), ஆந்திர சட்டமன்றம் (ஹைதராபாத்), பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம், கொச்சின் ஹில், டெல்லி ஐ.ஏ.ஆர்.ஐ., லக்னௌ என்.பி.ஆர்.ஐ., எலக்ட்ரானிக் சிட்டி (பெங்களூர்), பெங்களூர், மைசூர், புனே இன்ஃபோசிஸ் வளாகங்கள்[2], ஜம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பாலை, டெல்லி மாநகர விமான நிலையம் விரைவுப்பாதை போன்ற குறைப்பிடத்தக்க இடங்கள் இதன் பாதுகாப்பில் உள்ளன[3].

 
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வாயில்

விமான நிலைய பாதுகாப்பு

தொகு

இந்திய போதுவரத்து விமான நிலையங்கள் எல்லாம் இப்படையின் பாதுகாப்பில் உள்ளன. இதற்கு முன் அந்தந்த மாநிலங்களின் விமான நிலைய காலவர்களின் கண்காணிப்பு நிலையங்கள் இருந்தன. 1999ல் நடந்த இந்தியன் ஏர்லைன் ஃபிளைட் 814 விமான கடத்தலுக்குப் பின்னர் ,விமான நிலையங்கள் எல்லாம் படிப்படியாக இப்படையின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டன. 2000 பிப்ரவரி 3 ஜெய்ப்பூர் விமான நிலையமே மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் வந்த முதல் விமான நிலையமாகும்.[4]. தற்போதைக்கு 58 சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலையங்கள் இதன் பாதுகாப்பில் உள்ளன.

டெல்லி மாநகரக் காவல்

தொகு

2007 முதல் டெல்லி காவல் துறையிடமிருந்து டெல்லி மாநகரை பாதுகாக்கும் பணியைப் பெற்று இயங்குகிறது.[5] முக்கிய சாலைகள், இரயில் நிலையங்களில் எல்லாம் சி.சி.டி.வி.கள் மூலம் கண்காணித்து வருகிறது.

இதனையும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இராஜீவ், தலைமை இயக்குநர்
  2. "Infosys gets CISF cover". Archived from the original on 2009-08-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03.
  3. [1]
  4. Mid-November target for CISF takeover of airport-Kolkata-Cities-The Times of India
  5. http://timesofindia.indiatimes.com/articleshow/1730990.cms