மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Central Sericultural Research and Training Institute) என்பது இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் நிறுவனம் ஆகும்.

மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
Central Sericultural Research and Training Institute
வகைபட்டுவளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்1943
Parent institution
ஜவுளித் துறை
பணிப்பாளர்முனைவர் வி. சிவபிரசாத்
அமைவிடம், ,
23°40′40″N 87°02′51″E / 23.6778509°N 87.0475283°E / 23.6778509; 87.0475283
வளாகம்நகரம்
சேர்ப்புகல்யாணி பல்கலைக்கழகம்
இணையதளம்www.csrtiber.res.in

பொது

தொகு

மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1943ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது பெங்களூரில் உள்ள இந்தியப் பட்டு வாரியத்தின் ஓர் அங்கமாக மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் அமைந்துள்ளது.[1] இந்நிறுவனம் கொல்கத்தாவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நோக்கம்

தொகு

இந்நிறுவனம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பட்டுவளர்ப்பினை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பட்டுவளர்ப்பில் பல்வேறு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வினை மேற்கொண்டுள்ளது. பல்வேறு மல்பெரி வகைகளை இந்த பகுதிக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்துள்ளது. பட்டுப்பூச்சி வகைகளிலும் ஆய்வு மேற்கொண்டு பட்டுப்பூச்சி ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, பட்டுநூற்பு தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தக்க மேம்பாட்டினை செய்துள்ளது.[2]

பிரிவுகள்

தொகு

பட்டுவளர்ப்புத் தொழிலில் மனித வள மேம்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சி அளித்து வருவதோடு, பட்டுவளர்ப்பில் பட்டப்படிப்பிற்கு பிந்தைய பட்டய படிப்பினையும்[3] நடத்திவருகிறது. இங்குச் செயல்படும் முக்கியப் பிரிவுகள்:

  • பட்டுப்புழுவின் உணவான மல்பெரி வளர்ப்பு பிரிவு
  • பட்டுப் புழுவளர்ப்பு பிரிவு
  • உயிரித்தொழில்நுட்பவியல் பிரிவு
  • பயிற்சி பிரிவு
  • திட்ட மேலாண்மை, ஒருங்கிணைப்பு, மதிப்பீடு பிரிவு

மேற்கோள்கள்

தொகு