மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம்
பருத்தி உற்பத்தியில் நீண்டகால ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் ஆதரவை வழங்குவதற்கும் மகாராட்டிரா மாநிலத்தில் நாக்பூரிலும், அரியானா மாநிலத்தில் சிர்சாவிலும் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஐ.சி.ஆர்)(Central Institute for Cotton Research), இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தினால் 1976ல் நிறுவப்பட்ட மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.[1] இது மாநில பல்கலைக்கழகங்களின் செயலில் ஈடுபாட்டுடன் பருத்தி குறித்த பயன்பாட்டு ஆய்வுகளை நடத்துகிறது. இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி முயற்சிகள் அகில இந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஏ.ஐ.சி.சி.ஐ.பி-1967ல் தொடங்கப்பட்டது) கீழ் நடைபெற்றுவருகின்றன. இதன் தலைமையகம் நாக்பூரிலும், மற்ற இரண்டு பிராந்திய அலகுகள் கோயம்புத்தூர், தமிழ்நாடு மற்றும் அரியானாவின் சிர்சாவிலும் அமைந்துள்ளன .
Established | ஏப்ரல் 1976 |
---|---|
Mission | பருத்தி ஆராய்ச்சி |
இயக்குநர் | முனைவர் கே. ஆர். கிராந்தி |
Owner | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் |
Location | இரு வளாகம்: 1. நாக்பூர்: தேசிய நெடுஞ்சாலை 44 நாக்பூர் 2. சிர்சா: தேசிய நெடுஞ்சாலை 49, சிர்சா, அரியானா, இந்தியா |
Coordinates | 21°02′13″N 79°03′18″E / 21.037°N 79.055°E |
Website | Official Website |
வளாகங்கள்
தொகுமத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் மகாராட்டிராவின் நாக்பூர் மற்றும் அரியானாவில் சிர்சா ஆகிய இரு வளாகங்களைக் கொண்டுள்ளது.
நாக்பூர் வளாகம்
தொகுமத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் நாக்பூர் (சி.ஐ.சி.ஆர் , நாக்பூர்) அல்லது சி.ஐ.சி.ஆர்.என்) மகாராட்டிரா அரசுடன் இணைந்து, விதர்பா பிராந்தியத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தியது (உழவர் தற்கொலைக்கு அதிக வாய்ப்புள்ள இடம் விதர்பா). ஒரு ஏக்கரில் அதிக விளைச்சலைத் தரவல்ல மேம்படுத்தப்பட்ட பிரேசில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது இத்திட்டம். ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவைக் குறைத்து பருத்தியின் மகசூலை அதிகரிப்பது இத்திட்டமாகும். பிரேசில் மாதிரி நேரான பருத்தி பயிர்களை அடிப்படையாகக் கொண்டது, அதே நேரத்தில் இந்திய அரசாங்கத்தின் மாதிரி பிடி பருத்தி பயிர்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.[2][3]
சிர்சா வளாகம்
தொகுமத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், சிர்சா (சி.ஐ.சி.ஆர் , சிர்சா அல்லது சி.ஐ.சி.ஆர்.எஸ்) அரியானா அரசாங்கத்துடன் இணைந்து சிர்சா நகரில் நிறுவப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலை 9இல் சவுத்ரி தேவிலால் பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ளது.
மேலும் காண்க
தொகு- இந்தியாவில் சிந்தனைத் தொட்டிகளின் பட்டியல்
- மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், முல்தான் (பாகிஸ்தான்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
- ↑ Makarand Gadgil. "Maharashtra govt to test Brazilian model in Vidarbha". LiveMint. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Indian government still ‘flip flopping’ on GM trials". 28 September 2014 இம் மூலத்தில் இருந்து 2014-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141026063753/http://www.nation.lk/edition/lens/item/33683-indian-government-still-%E2%80%98flip-flopping%E2%80%99-on-gm-trials.html.