மந்திரா அணை

இந்தியாவின் ஒடிசாவின் சுந்தர்கட் மாவட்டத்தில் கன்ஸ்பஹால் அருகே மந்திரா அணை (Mandira Dam) அமைந்துள்ளது. இந்த அணையானது சில வாரங்களுக்குப் பார்வையாளர்களுக்காக மூடப்பட்டுள்ளது. இது சங்க் ஆற்றின் குறுக்கே மந்திராவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து வரும் நீர் ரூர்கேலா எஃகு ஆலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1] [2] இந்த அணை 1957க்குப் பிறகு கட்டப்பட்டது. அணையினை இப்பகுதியில் அமைப்பதற்காக 2400 குடும்பங்கள் இடம்பெயர்ந்தது, இவர்களில் 843 பேர் மீள் குடியேற்றப்பட்டனர்.[3]

மந்திரா அணை

சுற்றுலா

தொகு

இந்த நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய வசதிகள் உள்ளன. இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையம் தென்கிழக்கு இரயில்வேயின் ஹவுரா-மும்பை பிரதான பாதையில் கன்ஸ்பஹாலில் அமைந்துள்ளது. ரூர்கேலா மிக நெருக்கமான சந்திப்பு நிலையம். கன்ஸ்பஹால் மற்றும் ரூர்கேலாவிலிருந்து இருசக்கர வாகனம், தனியார் வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ மற்றும் பேருந்து சேவை மூலம் அணையை அடையலாம்.[4]

 
மந்திரா அணை

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரா_அணை&oldid=3108607" இலிருந்து மீள்விக்கப்பட்டது