மந்துவில் குண்டுவீச்சு, 1999

மந்துவில் குண்டுவீச்சு 1999 செப்டம்பர் 15 அன்று முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்தை, மற்றும் அயல் பகுதிகளில் இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் போது சிறுவர்கள், பெண்கள் உட்பட மொத்தம் 24 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

புதுக்குடியிருப்பு, மந்துவில் குண்டுவீச்சு, 1999
இலங்கையில் அமைவிவடம்
இடம்புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, இலங்கை
நாள்செப்டம்பர் 15, 1999
10:00 காலை (+8 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழ் பொதுமக்கள்
தாக்குதல்
வகை
வான்வெளித் தாக்குதல்
ஆயுதம்கிஃபீர் ஜெட் வானூர்திகள்
இறப்பு(கள்)24
காயமடைந்தோர்குறைந்தது 40+
தாக்கியோர்இலங்கை வான்படை

நிகழ்வு

தொகு

புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்லும் தெருப் பகுதியில் உள்ளது மந்துவில் என்ற கடல் கலப்புக் கிராமம். முல்லைத்தீவு மாவட்டம் அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மந்துவில் சந்தைப் பகுதியை இலக்கு வைத்து 1999 செப்டம்பர் 15 புதன்கிழமை காலை இலங்கை வான்படைக்கு சொந்தமான இரண்டு கிஃபீர் ஜெட் போர் வானூர்திகள் தாக்குதல் நடத்தின.[1]

மந்துவில் சந்தை உட்பட அதன் அயலில் அமைந்திருந்த பல கட்டடங்கள், வீடுகள் இவ்விமானக் குண்டுவீச்சில் பெரும் சேதமடைந்தன. சந்தைப் பகுதியில் மனித உடல்கள் சிதறிக் கிடந்ததாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலி இறந்தவர்களின் எண்ணிக்கை 22 எனவும், காயமடைந்தவர்கள் 40 எனவும் அறிவித்தது.[1]

தாக்கங்கள்

தொகு

செஞ்சிலுவைச் சங்கம்

தொகு

இத்தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்த பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், இத்தாக்குதலில் 16 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர் என்றும், குண்டுவீச்சில் படுகாயமடைந்த மேலும் ஆறு பொதுமக்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது.[2]

மன்னிப்பு அவை

தொகு

பன்னாட்டு மன்னிப்பு அவை இக்குண்டுவீச்சுத் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்தது.[3][4] மன்னிப்பு அவையின் அறிக்கையில், இலங்கை இராணுவப் பேச்சாளர் இத்தாக்குதலை நிராகரித்திருந்தாலும், போரினால் இடம்பெயர்ந்திருந்த பொதுமக்கள் பெருமளவு கூடியிருந்த சந்தைப்பகுதியில் இடம்பெற்ற இத்தாக்குதல் பொதுமக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறியுள்ளது.

இலங்கை அரசு

தொகு

இலங்கை இராணுவப் பேச்சாளர் பொதுமக்கள் மீதான இத்தாக்குதலை நிராகரித்திருந்தார். இலங்கை வான்படையில் இரண்டு விமானங்கள் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தளங்கள் மீதே தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும், விடுதலைப் புலிகளின் தளம் நகரில் இருந்து 4 கிமீ தொலைவில் நந்திக்கடல் என்னுமிடத்திலேயே அமைந்திருந்ததாக வேறு தகவல்கள் தெரிவித்தன.

நினைவு நாள் நிகழ்வுகள்

தொகு

மந்துவில் சந்தைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் 2017 செப்டம்பர் 15 அன்று மந்துவிலில் இடம்பெற்றது. நாட்டின் பல இடங்களிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர். இத்தாக்குதலில் காயமடைந்த ஒருவர், தனது உடலில் 4 காயங்கள் ஏற்பட்டனவென்றும், 4 துண்டுகளையும் இதுவரையில் அகற்ற முடியவில்லை எனவும், இலங்கை அரசு தமக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கவில்லை எனவும் கூறினார்.[5][6]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "TamilNet : 21 civilians killed in SLAF attack". பார்க்கப்பட்ட நாள் 9-08-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. TamilNet. "TamilNet". www.tamilnet.com. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.
  3. https://www.amnesty.org/en/library/asset/ASA37/022/1999/fr/661b9c60-9171-49cd-9fcc-b400f7954cd8/asa370221999en.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  5. "Commemoration of Manthuvil Massacre Yesterday". Tamil Diplomat. 16-09-2017. பார்க்கப்பட்ட நாள் 17-09-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "Victims of 1999 Sri Lankan Air Force strike on Manthuvil remembered in Mullaitivu". Tamil Guardian. 15-09-2017. பார்க்கப்பட்ட நாள் 17-09-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)